சீனா டூ கோயம்புத்தூர்.. சித்திரவேல் அக்கவுண்டிலேயே 59 லட்சம், மொத்தம் 300 கோடி.. சுற்றி வளைத்த சிபிஐ
கோவை: சீன நாட்டை சேர்ந்த பங்கு வர்த்தக மோசடி கும்பல்கள், இந்தியாவில் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலி நிறுவனங்கள் தொடங்கி ஏராளமானவர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு பெற்று மோசடி செய்திருக்கின்றன. இதில் தொடர்புடையர்கள் பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. அப்படி விசாரிக்கையில், சீன நாட்டு கும்பல் மேற்கொண்ட ரூ.300 கோடி மோசடியில் கோவையில் கைதான சித்திரவேல் என்ற இளைஞருக்கு தொடர்பு இருப்பது சிபிஐ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
நமது நாட்டில் சீனா உள்பட சில வெளிநாடுகளில் இருந்து சிலர், உள்ளூரில் உள்ள சிலரின் உதவி மூலம், ஆன்லைனில் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்துள்ளனர். போலியாக நிறுவனங்களை தொடங்கி மக்களிடம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கூறி, நிறைய முதலீடுகள் செய்ய வைக்கிறார்கள். அதற்கு உள்ளூர் நபர்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் வேண்டிய பணம் கிடைத்ததும், மொத்தமாக கடையை சாத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.

அப்படித்தான் சீன நாட்டை சேர்ந்த பங்கு வர்த்தக மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போலி நிறுவனங்கள் தொடங்கி ஏராளமானவர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு பெற்று மோசடி செய்திருக்கிறார்கள். இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சீன மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்த கோவை ரேஸ்கோர்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32 வயதாகும் சித்திரவேல் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் போலியாக தொடங்கப்பட்ட 33 நிறுவனங்களுக்கான போலி லெட்டர்பேடு, 70 சிம்கார்டு, வங்கிகளின் கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சித்திரவேலிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல் தெரியவந்துள்ளது. சீன நாட்டை சேர்ந்த ஹுவான் லியு என்பவர் பெங்களூரு பெலந்தூர் பகுதியில் வசித்து வருகிறாராம். இவருடன் சேர்ந்து சித்திர வேல், பங்கு வர்ததகம், கிரிப்டோ கரன்சி, முதலீட்டு இரட்டிப்பு உள்பட பல்வேறு பெயர்களில் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இதில், சித்திரவேலின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.59 லட்சம் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
இதில் சீன நாட்டினர் மேற்கொண்ட ரூ.300 கோடி மோசடியில் சித்திரவேலுக்கும் தொடர்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கைதான சித்திரவேலை, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சி.பி.ஐ. தரப்பு வக்கீல் சுரேந்திரமோகன் ஆஜராகி, சித்திரவேலை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு நீதிபதி சிவக்குமார் அனுமதி அளித்தார். இதைத்தொடர்ந்து சித்திரவேலை, கோவையில் இருந்து விமானம் மூலம் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications