கோவை ஆம்னி பஸ்ஸில் சென்ற ஐடி பெண் ஊழியர்.. திடீரென வந்த கை.. அலறல்.. சிக்கிய கிளீனர்
கோவை: விருதுநகரில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்தில் பயணித்த ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் சில்மிசத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பேருந்தின் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைக்கு தொலைதூர பயணங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. சென்னையில் இருந்து கோவைக்கோ, கோவையில் இருந்து சென்னைக்கோ வெறும் 8 முதல் 10 மணி நேரத்தில் போய்விட முடிகிறது. இரவில் ஏறினால் காலையில் மதுரை அல்லது திருநெல்வேலிக்கு போய்விட முடியும்.

தமிழ்நாட்டின் கடைகோடியான கன்னியாகுமரிக்கு சென்னையில் இருந்து கிளம்பினால் காலையில் இறங்கிவிட முடியும். அந்த அளவிற்கு ஆம்னி பேருந்துகள் வேகமாக செல்கின்றன. வெறும் வேகம் என்பதை தாண்டி, சொகுசு வசதிக பல இருக்கின்றன. ஏசி படுக்கையில் எந்த அலுப்பும் இல்லாமல் படுத்துக்கொண்டே பயணித்தால், காலையில் தூங்கி எழுந்த உடன் கன்னியாகுமரியில் சென்னைக்கு வந்துவிட முடியும். பல 100 கிமீ தூரமுள்ள இடங்களை கடக்க ரயில் பயணத்தை போல் ஆம்னி பேருந்து பயணம் முக்கியமானதாக இந்தியாவில் மாறிவிட்டது.
இந்நிலையில் ஆம்னி பேருந்து பயணங்களில் சில சமயங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பது உண்டு. அப்படி ஒரு சம்பவம் கோவை சென்ற ஆம்னி பேருந்தில் நடந்ததாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் கோவையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார். அந்த பெண் கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றார். பின்னர் விடுமுறை முடிந்ததும் பணிக்கு செல்வதற்காக விருதுநகரில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.
அவர், கடந்த 28-ந் தேதி விருதுநகரில் இருந்து ஆம்னி பஸ்சில் கோவைக்கு புறப்பட்டு வந்துள்ளார். மறுநாள் காலையில் அந்த பஸ் கோவை காந்திபுரத்திற்கு வந்தது. அதில் இருந்து ஒவ்வொரு பயணிகளாக கீழே இறங்கி கொண்டிருந்தார்கள்.. ஐ.டி. பெண் ஊழியரும் தனது உடைமைகளை எடுத்து கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த பஸ்சில் கிளீனராக பணிபுரியும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரன் என்ற சுபாஸ் சந்திரபோஸ்(41), ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். அப்போது அவரை அழைத்து செல்வதற்காக வந்திருந்த அவரது உறவினர்கள் மற்றும் சக பயணிகளும் அந்த கிளீனரை கண்டித்தனர். மேலும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கோவை காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications