கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"2011".. அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடியார்.. மிரளும் அறிவாலயம்.. தெறிக்க விடும் முதல்வர்!

2011ம் ஆண்டு தேர்தல் வியூகத்தை கையில் எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

கோவை: கடந்த 2011-ம் ஆண்டிற்கே திரும்பவும் நம்மை எடப்பாடியார் அழைத்து செல்கிறார்.. ஆம்.. 2011-ல் மறைந்த ஜெயலலிதா எப்படி, தமிழகத்தை மிரள வைத்தாரோ, அதுபோலவே ஒரு புது அஸ்திரத்தை முதல்வர் பிரச்சாரத்தில் கையில் எடுத்துள்ளார்.

கடந்த, 2006 முதல், 2011 வரை திமுகவின் ஆட்சி இருந்தது.. அந்த சமயத்தில் திமுகவின் பலமும் மத்தியிலும் வலுவாக இருந்தது.. பெருவாரியான ஆதரவையும் பெற்றிருக்கவும், எப்படியும் 2011-ல் மறுபடியும் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டது.

மூலை முடுக்கெல்லாம், மீண்டும் உதயசூரியனே என்ற முழக்கம் கேட்டது.. ஏற்கனவே 5 வருடம் ஆட்சியில் இல்லாமல் இருந்த ஜெயலலிதா இங்குதான் தன் வியூகத்தை அதிகப்படுத்தினார்.. திமுகவின் திட்டத்தை முறியடிக்கும் வேலையில் இறங்கினார்.

ஆட்சி

ஆட்சி

உண்மையை சொல்லபோனால், ஜெ-ஜானகி விவகாரத்துக்கு பிறகு 2011-ம் ஆண்டு தேர்தல்தான் ஜெயலலிதாவுக்கு மிகவும் சவாலாக இருந்தது.. அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் பலமாக இருக்கும் திமுகவை, அடுத்ததாக ஆட்சிக்கு வரப்போவதும் திமுகதான் என்று பரவலான எண்ணம் பரவிய நிலையிலும், அதை சுக்குநூறாக தவிடு பொடியாக்கினார்..

 கூட்டம்

கூட்டம்

அதற்கு பெரிதும் உதவியது, கோவை வஉசி மைதானத்தில் நடந்த பிரமாண்டமாக கூட்டமாகும்.. கூட்டணி கட்சி தலைவர்கள் அத்தனை பேரும் பங்கேற்கும் வகையில் அந்த கூட்டம் நடத்தப்பட்டது.. கோவை ஏர்போர்ட்டில் ஜெயலலிதாவை வரவேற்கவே லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.. அதேபோல, அதிமுக கூட்டமோ நிரம்பி நிரம்பி வழிந்தது..

 மின்வெட்டு

மின்வெட்டு

திமுக ஆட்சியில் அப்போது பெரிதும் பாதித்தது மின்வெட்டு பிரச்சனைதான்.. அதுபோக வழக்கமாக திமுக மீது கட்டப்பஞ்சாயத்து, வன்முறைகள் போன்றவை அதிகமாக நிகழக்கூடியவைதான்.. அதனால், இந்த ஒரு விஷயத்தை மட்டுமே எடுத்து ஜெயலலிதா பேசினார்.. திமுக ஆட்சிக்கு வந்தால், மீண்டும் கட்டப்பஞ்சாயத்து, அராஜகம்தான், மிரட்டி பணிய வைப்பார்கள்.. யாரும் ஏமாறாதீர்கள் என்று ஜெ.பேசிய பேச்சு மக்களை சிந்திக்க வைத்தது.. அந்த தேர்தலிலேயே பெரும் மாற்றத்தை தந்தது. அதோடு சரி.. அப்போது போனதுதான் திமுக.. இன்னும் எழவில்லை.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இதே அஸ்திரத்தைதான் எடப்பாடியாரும் கையில் எடுத்துள்ளார்.. ஏற்கனவே ஒரு பிரச்சாரத்தில் பேசும்போது,
"உதயநிதி ஸ்டாலின் எப்போது கட்சிக்கு வந்தார்? அவருக்கு பின்னாடியே திமுகவின் மூத்த தலைவர்கள் ஓடுகிறார்கள், கார் கதவை திறந்து விடுகிறார்கள்.. கூனி குறுகி வணக்கம் சொல்கிறார்கள்... தமிழக போலீசாரையே எச்சரிக்கிறார் உதயநிதி... திமுக ஆட்சிக்கு வரும் என்று மிரட்டுகிறார். ஆட்சியில் இல்லாத போதே இப்படி காவல் துறையை மிரட்டுகிறாரே, வந்தால்? திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடி ஆட்சியாக மாறிவிடும்.." என்று கூறியிருந்தார்.

ரவுடி

ரவுடி

இப்போது கோவை கூட்டத்திலும் அதையேதான் பேசினார்.. திமுகவினர் ஆட்சிக்கு வந்தால், அராஜகம் செய்வர்.. கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள்.. ரவுடி ஆட்சிதான் நடக்கும்.. தொழில்நிறுவனத்தினரை மிரட்டுவர்.. அதனால் யாரும் ஏமாந்து போகாதீர் என்று எச்சரிக்கை செய்துவிட்டு போனார்.. முதல்வரின் இந்த பேச்சுதான், கோவை மாவட்ட தொழில்துறையினரை ஆழமாக சிந்திக்க வைத்து வருகிறதாம்.. அதுமட்டுமல்ல, ஜெ. பாணி பிரச்சாரத்தைபோலவே ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தவும் அதிமுக தலைமை யோசித்து வருகிறதாம்.

 அதிரடிகள்

அதிரடிகள்

எல்லாவற்றிலும் ஜெ.பாணியையே பின்பற்றி வருகிறார் எடப்பாடியார்.. ஜெயலலிதாவின் சென்ட்டிமென்ட் பிரச்சார இடமான திருப்போரூர் கந்தசுவாமி கோவில் அருகேதான், எடப்பாடியார் இப்போதும் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்... ஜெ.போலவே பிரச்சார யுக்தியையும் கையில் எடுத்து பேசி வருகிறார்.. ஜெ. பிரம்மாண்டமான கூட்டத்தை கூட்டவும் யோசித்து வருகிறார்.. ஜெ.போலவே நாலாபக்கமும் தனக்கிருந்த நெருக்கடிகளை நொறுக்கிவிட்டு, எடப்பாடியாரும் மீண்டும் ஆட்சியை தக்கவைப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்..!

English summary
CM Edapadi Palanisamys another new strategy in Election Campaign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X