அழுத குழந்தைக்கு வேடிக்கை காட்டிய முதலமைச்சர்... கோவையில் 2-வது நாளாக பிரச்சாரம்..!
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அழுத குழந்தைக்கு வேடிக்கை காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Recommended Video

அதிமுகவின் பிரச்சார உத்திகள் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் முதல்வர் தரப்பு உற்சாகத்தில் உள்ளது.
அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி முதலமைச்சரை திக்குமுக்காட வைத்துவிட்டார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

சூறாவளி பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு வாக்குகேட்டு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்னும் வேட்பாளர்களே அறிவிக்காத போதும், தொகுதிப் பங்கீடு முடிவடையாத போதும் அதிமுக தேர்தல் வேலைகளை விறு விறுவென பார்த்து வருகிறது.

வேடிக்கை காட்டி
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காளப்பட்டி அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது கட்சிக்காரர் ஒருவரது குழந்தை வேனில் இருந்த முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டது. முதலமைச்சரிடம் சென்றதும் அந்தக் குழந்தை திடீரென அழுகத் தொடங்கியது. இதையடுத்து அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி அழுகையை நிறுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தார் முதலமைச்சர்.

குதிரை வண்டி
இதனிடையே இந்த நிகழ்வு தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. மேலும், முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ள கூட்டங்களில் ரஜினி வேடமணிந்த ஒருவர் முத்து திரைப்பட பாணியில் குதிரை வண்டியில் நின்றவாறு இரட்டை இலை சின்னத்தை காட்டி ஆக்ஷன் செய்து கொண்டு செல்கிறார். இது பார்ப்பவர்களை ரஜினியின் ஆதரவு இரட்டை இலைக்கு தான் என்பது போல் தெரிந்தது.

ஆன்மிக கூட்டமா?
இதேபோல் வழக்கமான ஆடல் பாடல் கச்சேரிகளை தவிர்த்து அனுமான், கிருஷ்ணர், என கடவுள் வேடமிட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினருக்கு ஆசி வழங்குவது போன்று புது வித ஏற்பாடுகளை செய்திருந்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இது போதாதென்று எஸ்.பி.வி. ஆர்மி என்ற பெயரில் நூற்றுக்கணக்கானோர் சட்டை பையில் பேட்ஜ் அணிந்து பிரச்சார பணிகளை கவனித்தனர்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications