‛‛செந்தில் பாலாஜியை மறக்காத ஸ்டாலின்’’.. கோவை மேடையில் திடீர் பாராட்டு.. என்ன சொன்னார் தெரியுமா?
கோவை: கோவையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை மறக்காமல் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் முதலாக இன்று ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்தார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. இந்நிலையில் தான் இன்று மாலையில் நெல்லையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அதன்பிறகு ராகுல் காந்தி கோவை செட்டிப்பாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பங்கேற்றார். கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகிய 3 பேருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் வாக்கு சேகரித்து பேசினர்.
இந்த கூட்டத்தில் முதலில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை மறக்காமல் குறிப்பிட்டு பாராட்டினார். அதாவது செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தார். அதோடு கோவை மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்பட்டார். மேலும் கோவை உள்பட கொங்கு மண்டலத்தில் திமுகவை வளர்க்க செந்தில் பாலாஜி செய்த வேலையால் முதல்வர் ஸ்டாலின் ஈர்க்கப்பட்டார்.
‛இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுலா? மேடையில் ஸ்டாலின் கூறிய வார்த்தையை கவனிச்சீங்களா!
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரியும் இன்னும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் இன்று கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை நினைவுப்படுத்தி பாராட்டினார். அதாவது ஸ்டாலின் தனது தொடக்க உரையில் ராகுல் காந்தி, திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள், காங்கிரஸ் தலைவர், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களை வரவேற்று பேசினார்.
அதன்பிறகு அவர் தனது உரையை தொடங்கினார். அப்போது, ‛‛நான் மார்ச் 22ம் தேதி என்னுடைய பரப்புரையை திருச்சியில் தொடங்கினேன். அந்த வரிசையில் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றி விழா மாநாட்டை போல் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஏற்பாட்டை செய்துள்ள கோவை பொறுப்பாளர் அமைச்சர் முத்துசாமி, அவருக்கு தோளோடு தோள் நிற்கும் அமைச்சர் டிஆர்பி ராஜா, பொள்ளாச்சிக்கு பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர்கள் சக்கரபாணி, சாமிநாதன், கரூர் செயல்வீரர் அன்பிற்கினிய சகோதரர் செந்தில் பாலாஜி , ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.
‛ஊழலுக்கு யுனிவர்சிட்டி கட்டினால் பிரதமர் மோடி தான் வேந்தர்’.. ராகுல் முன் பாஜகவை விளாசிய ஸ்டாலின்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர அவர் தொடர்ந்து நீதிமன்றங்களை நாடி வருகிறார். ஆனால் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார். இந்நிலையில் தான் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை மறக்காமல் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசி பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications