‛‛ராகுலே வருக’’.. அடுத்த வார்த்தை தான் முக்கியம்.. பிரதமர் வேட்பாளரை சூசகமாக அறிவித்தாரா ஸ்டாலின்?
கோவை: ‛இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் கோவையில் இன்று ராகுல் காந்தியுடன் சேர்ந்து ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த மேடையில் ராகுல் காந்தி பற்றி முதல்வர் ஸ்டாலின் கூறிய வார்த்தை கவனம் பெற்றுள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்பட 24 கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் ‛இந்தியா’ கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) தலைவர் சரத்பவார் உள்ளிட்டோருக்கும் பிரதமர் பதவி மீது கண்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று நினைக்கிறது.
‛ஊழலுக்கு யுனிவர்சிட்டி கட்டினால் பிரதமர் மோடி தான் வேந்தர்’.. ராகுல் முன் பாஜகவை விளாசிய ஸ்டாலின்
இப்படி பிரதமர் பதவி மீது பலரும் கண்வைத்துள்ளனர். அதோடு ‛இந்தியா’ கூட்டணியில் பல கட்சிகள் உள்ளதால் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் அது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதால் பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகிய 3 பேருக்கு ஆதரவாக கோவை செட்டிப்பாளையத்தில் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
நெல்லையில் திரண்ட கூட்டம்.. டக்கென காரை விட்டு இறங்கி ராகுல் செய்த செயல்.. நெகிழ்ந்த தொண்டர்கள்
இதில் காங்கிரஸ், திமுக சார்பில் நடத்தப்பட்ட இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி எம்பி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் ஒரே மேடையில் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முதலில் பேசினார். அப்போது அவர் கூறிய வார்த்தை என்பது ‛இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அதாவது முதல்வர் ஸ்டாலின் தனது தொடக்க உரையில் ராகுல் காந்தியை வரவேற்றார். அப்போது அவர், ‛‛இந்தியாவின் எதிர்காலம், நம்பிக்கை நாயகன், டியர் பிரதர், என்னுடைய அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்களே’’ எனக்கூறி வரவேற்றார். அதன்பிறகு ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பற்றி பேசினார். அந்த சமயத்தில், ‛‛ராகுல் அவர்களே வருக.. புதிய இந்தியாவுக்கு விடியல் தருக’’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
ஹெலிகாப்டரால் வந்த சிக்கல்.. கடைசி நேர தகவலால் அமித்ஷாவின் திருமயம் விசிட் திடீர் ரத்து.. பின்னணி
முதல்வர் ஸ்டாலின் கூறிய இந்த வார்த்தை தான் தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. ராகுல் அவர்களே வருக.. புதிய இந்தியாவுக்கு விடியல் தருக என்ற வார்த்தையை கூறியதன் மூலம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதல்வர் ஸ்டாலின் முன்னிறுத்துகிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதல் முதலில் அறிவித்தது ஸ்டாலின் தான்.
அதாவது கடந்த 2018 ல் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தனது தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைத்து இருந்தார். ராகுல் காந்தி பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசினார். அப்போது, ‛‛நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் காக்கவே ஒன்றிணைந்துள்ளோம். மோடி அரசை வீழ்த்த வேண்டும். வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க வேண்டும். ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சி தருக’’ என முதல் ஆளாக அறிவித்தார்.
ஆனால் இன்றைய கூட்டத்தில் வெளிப்படையாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கவில்லை. இருப்பினும் கூட ‛‛ராகுல் அவர்களே வருக.. இந்தியாவுக்கு விடியல் தருக’’ என்ற ஸ்டாலின் வார்த்தை என்பது ‛இந்தியா’ கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான தொடக்கப்புள்ளியா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தியை பிரதமராக்க இதுபோன்ற வார்த்தையை தான் பயன்படுத்தி இருந்தார். கருணாநிதி, ‛‛நேருவின் மகளே வருக, நல்லாட்சி தருக'' என தெரிவித்து இந்திரா காந்திக்கு அழைப்பு விடுத்தார். அந்த பாணியில் தான் முதல்வர் ஸ்டாலினும், ‛‛ராகுல் காந்தியே வருக.. புது இந்தியாவுக்கு விடியல் தருக'' என கூறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications