தமிழ் புதல்வன் திட்டம்! எங்களுக்கு இல்லையானு கேட்டீங்கல்ல? கோவையில் கேட்ட முதல்வர்! அதிர்ந்த அரங்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ 1000 உதவித் தொகையை நேற்றிரவே மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது போல் மாணவிகளுக்கு மட்டும்தானா, எங்களுக்கு ரூ 1000 உதவித்தொகை இல்லையா என மாணவர்கள் கேட்டதை அடுத்து தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

173 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவை அரசு கல்லூரியில் நடந்த விழாவில் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் அந்த திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கி விழாவில் பேசினார்.

m k stalin coimbatore

அவர் பேசுகையில் தமிழ்ப்புதல்வன் திட்டம் என் மனதிற்கு நெருக்கமானது என்பதால் அதை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அது போல் தமிழ் புதல்வன் திட்டத்தில் ரூ 1000 உதவித் தொகை நேற்று இரவே மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டுவிட்டது.

நம் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று மகளிருக்கு விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், புதுமை பெண் திட்டம், நாம் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

நாம் முதல்வன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதுமை பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த போது எங்களுக்கெல்லாம் கிடையாதா என மாணவர்கள் கேட்டனர்.

என்ன கேட்டீர்கள்தானே என முதல்வர் கேட்டதும் விசில் சப்தம் எழுந்தது. பின்னர் அவர் பேச்சை தொடர்கையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ 1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இனி மாதாமாதம் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ 1000 வரவு வைக்கப்படும். இதை உங்கள் சகோதரனாக, உங்கள் தந்தையாக நான் வழங்குகிறேன்.

பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும். உங்களுக்கு உதவியாக துணையாக உங்கள் பெற்றோர் குடும்பத்தினர் இருப்பதை போல் நானும் இந்த திராவிட மாடல் அரசும் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தொகையை வைத்து வாழ்க்கையில் நீங்களும் முன்னேறி உங்கள் குடும்பத்தின் தரத்தையும் உயர்த்த வேண்டும்.

எந்த ஒரு மாணவரும் திசை மாறி செல்லக் கூடாது, 12 பிளஸ் முடிக்கும் எல்லா மாணவர்களும் கண்டிப்பாக உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்பு என தங்களை மெருக்கேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எந்த தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிய வேண்டும். ஒலிம்பிக்கில் வீராங்கனை வினேஷ் போகட் எப்படிப்பட்ட தடைகளை தகர்த்தெறிந்து இன்று எல்லோராலும் பாராட்டப்படுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

2030 ஆம் ஆண்டு பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குடன் பயணித்து உலகிலேயே தமிழகம் முன்மாதிரியாக திகழ பாடுபடுவோம். இந்த கலைக் கல்லூரி முதல்வரின் கோரிக்கைக்கிணங்க, விடுதி கட்டடமும் கருத்தரங்கமும் கட்டி தரப்படும். புதுமை பெண்களுக்கும் தமிழ் புதல்வர்களுக்கும் மிக்க நன்றி என கூற தனது உரையை முடித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் பேர் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுமை பெண் திட்டத்தின் கீழ் கடந்த 2022-2023 ஆம் ஆண்டு 2.09 லட்சம் மாணவிகள் பயனடைந்து வந்த நிலையில் 2023- 2024 ஆம் நிதியாண்டில் 64,231 மாணவிகள் கூடுதலாக பயன் பெற்று வருகிறார்கள். திட்டம் தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை 3,28,280 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு தற்போதைய நிதியாண்டிற்கு ரூ 370 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ 95.61 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவிகளை போல் மாணவர்களுக்கும் ரூ 1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் உயர் கல்விச் சேர்க்கையை அதிகரிக்க வகுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7.72 லட்சம் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்திருக்கிறார்கள். அவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழகத்தில் அதிகமாகும்.

அவர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி 3.28 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின்படி 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப்புத்தங்கள், பொது அறிவுக்கான புத்தகங்களை வாங்க ரூ 1000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த தமிழ்ப்புதல்வன் திட்டத்தை இன்றைய தினம் கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+