சாம்பாரில் பல்லி.. கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மாநகராட்சி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவ - மாணவிகள் 44 பேர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதிய உணவில் சாம்பாரில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்தது. பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ என பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கும், மருத்துவமனைக்கும் ஓடினர்.
கோவை கவுண்டம்பாளையம் அருகே மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று மதியம் வழக்கம் போல் மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் உணவு வழங்கப்பட்டது. மதிய உணவை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவ மாணவிகள் திடீரென மயக்கமடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதி
உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனே சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதித்து முதலுதவி சிகிசை அளித்தனர். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாடு மற்றும் சாம்பாரை பார்வையிட்டனர்.
இதில் சாம்பாரில் பல்லி ஒன்று விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மருத்துவக் குழுவினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள், 13 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர்கள் இடையே வாக்குவாதம்
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மாணவ - மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் குவிந்தனர். அவர்களை ஆசிரியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனது என பார்க்க விடுங்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை சொன்னதும் அவர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
இதேபோல் மாநகராட்சி அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவ மாணவிகளை பார்வையிட்டனர். அவர்களது பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் பல்லி விழுந்த சாம்பார், உணவுகளை ஆய்வு செய்து, உணவு மாதிரிகளை சேகரித்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications