Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 தாலி.. 2 மனைவி.. "ஹனிமூன் போயிட்டு வர்றீயா? வயிறு எரியுதுடா".. கோவை ஏர்போர்ட்டில் ஆடிப்போன மாப்ளை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் நேற்றுமுதல் இணையத்தில் வீடியோவாக வெளிவந்து சலசலப்பை தந்துவருகிறது. எந்நேரமும் பரபரப்பாக இயங்கிவரும் கோவை ஏர்போர்ட்டில், நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்களே வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விட்டனர். என்ன நடந்தது?

இரவு 7.30 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் ஒன்று தரையிறங்கியது.. அதிலிருந்த பயணிகள் வரவேற்பு வளாகத்துக்குள் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் வெளிநாட்டுக்கு தேன்நிலவுக்கு சென்றிருந்த புதுமண தம்பதியினர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்.

Coimbatore Kovai 2 thali

திடீரென அந்த தம்பதியை இளம்பெண் ஒருவர் வழிமறித்தார்.. அந்த இளம்பெண்ணின் கழுத்தில் மஞ்சள் கயிறு காணப்பட்டது.. தம்பதியை சூழ்ந்துக்கொண்ட இளம்பெண், இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார். ஆனால் அந்த இளைஞரோ, இளம்பெண்ணை பார்த்ததுமே பதறிப்போய்விட்டார். மேலும் பொது இடம் என்பதால், எதுவுமே பேசாமல், தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்து செல்வதிலேயே குறியாக இருந்தார்.

ஹனிமூன் போயிட்டு வர்றீயா

அதற்குள் இன்னொரு இளைஞர், ஆவேசமாக கத்திக் கொண்டிருந்த இளம்பெண்ணின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு, தம்பதியை தொந்தரவு செய்யாத வண்ணம் பார்த்துக் கொண்டார். இவர் புது மாப்பிள்ளையை அழைத்து செல்ல வந்த அவரின் உறவினர் என்று தெரிகிறது. இதனால் அந்த இளம்பெண் மேலும் ஆவேசமாகி, தம்பதியை பார்த்து கோபத்தில் திட்ட ஆரம்பித்தார்.

"என்னை கல்யாணம் பண்ணிட்டு, அவ கூட நீ ஹனிமூன் போயிட்டு வர்றீயா? பொம்பள பொறுக்கி" என்று சத்தம் போட்டார்.. உடனே இளைஞருடன் சென்ற மனைவியை பார்த்து, "அவன நம்பாதே, அவன நம்பாதே சொல்லிட்டேன்.. அவன் மேல் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் இருக்கு. அவன பிடிங்க, காரில் ஏறி ஓடுறத பாருங்க" என்று கதறிக்கொண்டே, அந்த இளைஞரை பிடிக்க முயன்றார்.

ஆனால் அவரிடம் செல்லவிடாமல் இன்னொரு இளைஞர் இளம்பெண்ணின் கையை கெட்டியாக பிடித்து கொண்டேயிருந்தார். உடனே இளம்பெண், "என் கைய விடு. என் கைய பிடிக்க நீ யாரு? என்று அவரையும் வசைபாடினார்.

அவனே ஒரு பொம்பள பொறுக்கி

அப்போதும் இளைஞர், இளம்பெண்ணின் கையை விடவில்லை. அவரது பிடியிலிருந்து திமிற முயன்றும் முடியவில்லை.. அந்த தம்பதியிடம் இளம்பெண், அவன பிடிங்க... விடாதீங்க, அவன பிடிங்க... டேய் ஸ்டேஷனுக்கு வாடா என்று கதறினார்.. ஆனால், தம்பதியினரோ வேக வேகமாக நடந்து சென்று காரில் ஏறிக் கொண்டனர்.

இதற்கு பிறகு, அங்கிருந்த போலீசார், ஸ்டேஷனுக்கு போய் சொல்லுங்கள் என்று இளம்பெண்ணுக்கு சமாதானம் செய்தார்கள். ஆனால், அந்த பெண்ணோ, தன்னுடைய கெட்டியாக இறுக்கி பிடித்து கொண்டிருந்த இளைஞரை பளார் என்று கன்னத்தில் விட்டார். அவரது சட்டையை பிடித்து இழுத்து, அவனுக்கு சேப்டியா நீ வந்தியா? அவனே ஒரு பொம்பள பொறுக்கி, நீ ஒரு பொம்பள பொறுக்கி என அவரை திட்ட ஆரம்பித்தார்.

என் வயிறு எரியுதுடா

பிறகு போலீசார் அப்பெண்ணை சமாதானம் செய்தார்கள்.. அதற்கு அந்த பெண், சேஃப்டியா? சேஃப்டியா? காசு இருந்தால் என்ன வேணுமானாலும் செய்வீங்களா? என்று கேள்வி எழுப்பினார்.. தன்னுடைய கையை இறுக்கி பிடித்த இளைஞரை பார்த்து, என் வயிறு எரியுதுடா? சத்தியமா சொல்றேன், என்று அழுதுகொண்டே சொன்னார்.

இந்த சம்பவத்தையெல்லாம் அங்கிருந்தவர்கள் வீடியோ செல்போனில் எடுத்து கொண்டிருந்தனர்.. உடனே அவர்களை பார்த்து அந்த பெண், இத்தனை பேர் நிக்கிறீங்களே, ஒரு ஆளு அவன பிடிச்சீங்களா? எல்லாரும் வீடியோ மட்டும் எடுக்கிறீங்க. யாராவது அவன பிடிச்சீங்களா?' என்று கோபமாக கேட்டார்..

பிறகு அப்பெண்ணை போலீசார் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விமானத்தில் இருந்து தம்பதியாய் இறங்கி வந்த இளைஞர், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் நியாயம் கேட்க வந்ததாகவும் சொன்னார்.

இன்ஸ்டாகிராம் காதல்

இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, கோவை பெரிய கடைவீதியை சேர்ந்த தொழிலதிபரின் மகனுடன் சென்னையை சேர்ந்த இந்த பெண்ணிற்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன், பிறகு கடந்த 2 மாதங்களுக்கு முன் அப்பெண் கோவை வந்தார். இருவரும் லிவ் இன் டு கெதரில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவெடுத்து பெண் பார்த்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இளைஞரின் திருமணத்திற்கு இன்ஸ்டா பெண்ணும் சென்றுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பெண்ணிற்கு ஏற்பட்ட மனமாற்றத்தால் 'லிவ் இன்' காதலனுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். பிறகு அவர் எகிப்துக்கு ஹனிமூன் கொண்டாட வெளிநாடு சென்று திரும்பி வரும் தகவல் தெரிந்ததையடுத்து ஏர்போர்ட்டுக்கு வந்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். இப்போது அந்த இளைஞர் மீது புகார் தரவேண்டும் என்கிறார். அதனால், இதுகுறித்து மகளிர் போலீஸில் புகார் தர சொல்லி உள்ளோம்'' என்றனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+