கோயம்புத்தூர் ஜிடி நாயுடு மேம்பாலம்.. கோல்ட்வின்ஸ் டூ நீலாம்பூர்.. டெல்லி சொன்ன புதிய குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை-அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை 10.1 கி.மீ. தொலைவிற்கு ரூ.1,621 கோடியில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்ற பெயரில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அடுத்ததாக கோவை அவினாசி ரோட்டில் கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலத்தை நீட்டிக்க விமான நிலைய ஆணையரகம் தடையின்மை சான்றிதழ் வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவைக்கு கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு மாவட்ட மக்கள் பிழைப்பு தேடி வந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் ஆகும் இதன் காரணமாக கோவையில் மக்கள் தொகை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கோவை மாநகரம் கேரளாவின் நுழைவு வாயிலாக மிகப்பெரிய வணிக மையமாக உள்ளதால், கோவையில் ஐடி துறையிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

Coimbatore Airports Authority issues no-objection certificate for extension of flyover to Nilambur

இதன் காரணமாக மக்கள் தொகை என்பது கோவை மற்றும் புறநகரில் சேர்த்து சுமார் 30 லட்சத்தை தாண்யிருக்கிறது. கோவை மாநகரம் இன்னும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் வாகன போக்குவரத்து எல்லா சாலைகளிலும் பீக் அவர்ஸ்களில் கடுமையாக அதிகரித்தது. குறிப்பாக அவினாசி சாலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது.. கோவையில் உக்கடத்தில் இருந்து கருமத்தப்பட்டிக்கு செல்லவே ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் ஆனது. சிக்னல்கள் அதிகமாக உள்ளதால் இந்த நிலைல் இருந்தது.

இதனை கருத்தில் கொண்டு தான் கோவை-அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை 10.1 கி.மீ. தொலைவிற்கு ரூ.1,621 கோடியில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் ஜி.டி.நாயுடு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை கூடுதலாக 5 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலத்தை நீட்டிக்க திட்டமிட்டாரகள். இதற்காக 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கையை மாநில நெடுஞ்சாலை துறையினர் தயாரித்தனர். அதில், ரூ.700 கோடி செலவில் 17.25 மீட்டர் அகலத்தில் மேம்பாலத்தை நீட்டித்துக் கட்ட முடிவு செய்யப்பட்டது.

தற்போதைய நிலையில் சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை பிரதான சந்திப்பு ரோடுகள், கடந்து செல்லும் சாலைகளும் கிடையாது. எனவே வாகனங்கள் எந்த இடத்திலும் ஏறி இறங்க வேண்டியது இல்லை. எனவே ஏறுதளம், இறங்கு தளங்கள் இன்றி, பைபாஸ் ரோட்டில் நீலாம்பூர் மேம்பாலம் சந்திக்கும் இடம் வரை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி கூறுகையில், கோவை அவினாசி ரோட்டில் விமானம் ஏறும் மற்றும் இறங்கும் பகுதியை ஒட்டி மேம்பாலம் அமைக்கப்பட இருக்கிறது. எனவே இந்திய விமானநிலைய ஆணையரகத்தின் ஒப்புதல் இந்த மேம்பால நீட்டிப்புக்கு அவசியம் ஆகும். மேம்பால கட்டுமான பணிக்காக விமானநிலைய ஆணையரகத்தின் ஒப்புதல் கிடைத்திருக்கிறது. 2033-ம் ஆண்டுக்குள் அதாவது 8 ஆண்டு காலத்துக்குள் மேம்பாலத்தை கட்டி முடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டபாதையுடன் ஒருங்கிணைத்து அந்த பகுதியில் மேம்பால தூண்கள் அமைக்க முன்பு ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை.. மெட்ரோ ரெயில் இப்போது வராவிட்டாலும் அந்த துறையினரின் தடையின்மை சான்று தேவையாகும். எனவே மெட்ரோ ரெயில் நிர்வாகத்துடன் பேசி உரிய முடிவு எடுக்க உள்ளோம். அதன்பிறகு மேம்பால கட்டுமானத்துக்கு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்குவோம்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+