கோவையில் நான் செய்த பணி.. திமுகவுக்கு சொடக்கு போட்டு சவால் விட்ட வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெகவும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், வேறு எந்தத் தொகுதியிலும் இல்லாதளவுக்கு தன் தொகுதியில் அதிக அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் திமுக அரசு அவர்களை வஞ்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம், "கோவையில் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, இன்று தமிழகம் முழுவதும் அரசு பணியாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் அத்தனை பேரும் போராடி வருகிறார்கள். தமிழ்நாடு போராட்டக் களமாக மாறி கொண்டிருக்கிறது.

anganwadi-centers-issue-vanathi-srinivasan-challenged-the-dmk

வானதி சீனிவாசன் புகார்

திமுக தேர்தலுக்கு முன்பாக என்ன வாக்குறுதி கொடுத்தனர். அதை நிறைவேற்றினார்களா. சொன்னார்களே.. செய்தார்களா. இது மட்டும் தான் அவர்களுடைய கேள்வியாக இருக்கின்றது. அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, இப்போது அனைவரையும் தெருவில் நிறுத்தி போராட்டத்திற்கு தள்ளியது தான் திராவிட மாடல் அரசின் லட்சணம். இதுகுறித்து சட்டசபையில் பேசுவேன்.

அங்கன்வாடி மையங்கள்

வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அப்போது அவர்களுக்கான நீதி கிடைப்பதற்கான முயற்சியை நான் மேற்கொள்வேன். போராடக் கூடிய சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், அவர்களுக்கு கிடைக்கின்ற மிக சொற்பமான ஊதியத்திற்கு வருடக் கணக்கில் உழைக்கிறார்கள். என் தொகுதியில் சி.எஸ்.ஆர் நிதி மற்றும் எம்.எல்.ஏ நிதியில் இருந்து புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டி கொடுத்திருக்கிறேன்.

பகிரங்க சவால்

நான் சவால் விடுகிறேன்.. தமிழகத்தில் வேறு எந்த தொகுதியிலும் இத்தனை புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டி இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு பெண்ணாக குழந்தையை அங்கன்வாடி மையத்தில் விட்டு ஏழை பெண்கள் பணிக்கும் செல்கிறார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலை இருந்தால் தான் அவர்கள் வேலை பார்க்க முடியும். சத்துணவு ஊழியர்கள் அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப பணத்தை வைத்து இரட்டிப்பு வேலை செய்கிறார்கள்.

பிரதமரை தாக்க முயற்சி

நாடாளுமன்றத்தில் பிரதமரையே தாக்க முயற்சி செய்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தோல்வி மேல் தோல்வியை சந்தித்துக் கொண்டிக்கிற காங்கிரஸும், எதிர்க்கட்சிகளும் இந்தளவிற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நினைத்து பார்க்கவே பதற்றமாக உள்ளது. பிரதமரை தாக்குவதற்கு அதுவும் நாடாளுமன்றத்தில் போராட்டம் என்கின்ற பெயரில் முயற்சி செய்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. சபாநாயகர் நிச்சயமாக ஆதாரத்தை வெளியிடுவார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+