மருதமலைக்கு போறீங்களா.. முருக பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க
கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் காரணமாகவும், வாகனம் நிறுத்துவதற்கான போதிய வசதி இல்லாததாலும், இனி வரும் காலங்களில் செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கடவுளில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கோயில் என்றால் மருதமலை தான். கோவையின் ரம்மியமான மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயில் முருகனின் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இக்கோயில் கோவை மாவட்டத்தின் நகர் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் என தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். விசேஷ நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கிருத்திகை, சஷ்டி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, தைப்பூசம் போன்ற பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும் வருவார்கள். அதேபோல, பக்தர்கள் பலரும் இந்தக் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருவதும் வழக்கம்.
மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். கொங்கு வேட்டுவ மன்னர்களால் இக்கோயில் அந்த காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை பராமரித்து வருகிறது. இப்பகுதியில் மருத மரங்கள் நிறைந்து காணப்படுவதால் மருதமலை என்று அழைக்கப்படுகிறது.
மருதமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பக்தர்களின் வசதிகளுக்காக பல்வேறு பணிகள் மருதமலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்டிகை, விஷேச தினங்கள், விடுமுறை நாட்கள் ஆகியவற்றின்போது கோயில் நிர்வாகம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கோவை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், இப்பணிகளின் காரணமாக போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாததாலும முக்கிய தினங்களில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்புகளின் படி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், இத்திருக்கோயிலில் போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத காரணத்தினாலும் இனி வரும் காலங்களில் செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
மேற்படி நாட்களில் பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications