மெட்ரோ ரயில் திட்டத்தால்.. கோவை அவிநாசி சாலை மேம்பாலம் நீட்டிப்பில் சிக்கல்
கோவை: கோவை அவிநாசி சாலையில் தென்னிந்தியாவிலேயே மிக நீளமான மேம்பாலம் (10.10 கிமீ தொலைவு) கட்டும் பணிகள் இறுதியடைந்துள்ளன. இந்த பாலத்தை மேலும் 5 கி.மீக்கு நீலாம்பூர் வரை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அதே வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் ஆய்வில் இருப்பதாலும், மேம்பாலத்துக்கு அவர்கள் தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதாலும் மேம்பால பணிகள் தொடங்குவதற்கு தாமதமாகி வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோவை இருக்கிறது. இந்திய அளவிலும் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை முன்னிலையில் உள்ளது. கோவை மாவட்டத்தின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் பல திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன. சில திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அவிநாசி மேம்பாலம் நீட்டிப்பு
அந்த வகையில் கோயம்புத்தூரின் மையப்பகுதியான அவிநாசி சாலையில் 10.10 கி.மீ தொலைவில், ரூ.1,700 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது அந்தப் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் தொடக்கத்தில் மேம்பாலத்தை திறப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.
பல மாவட்ட மக்கள் அவிநாசி சாலையை பயன்படுத்துவதால், அந்த மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வந்தபோது, அவிநாசி சாலை மேம்பாலத்தை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீலாம்பூர் வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று அறிவித்தார்.
மெட்ரோவால் சிக்கல்
அந்த அறிவிப்பு வெளியாகி சுமார் ஒரு வருடமாக போகும் நிலையில், இப்போதுவரை பெரியளவுக்கு பணிகளில் முன்னேற்றம் இல்லை. ஆரம்ப கட்ட ஆய்வு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. ஏற்கனவே கட்டிய பாலத்தையே அப்படியே நீட்டிப்பதா, அல்லது சற்று இடைவெளி விட்டு நீலாம்பூர் வரை தனியாக பாலம் கட்டுவதா என்று அதிகாரிகள் யோசித்து வந்தனர். பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதால், நீலாம்பூர் வரை தனியாகவே பாலம் கட்ட முடிவும் செய்தனர்.
இதையடுத்து ரூ.80 லட்சம் ஒதுக்கி விரிவான திட்ட அறிக்கை பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தின்படி, இதே பாதையில் உக்கடம் - கணியூர் மெட்ரோ வழித்தடம் அமைக்க, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக நீலாம்பூர் வரையிலான மேம்பாலம் கட்டுவதற்கு, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும்.
டேக் ஆஃப் ஆகாத திட்டங்கள்
இந்த சிக்கல் காரணமாக மேம்பாலத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள். தற்போதுவரை சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை 5.1 கி.மீ தொலைவு மேம்பாலம் கட்டுவதற்கு சுமார் 600 கோடி ரூபாய் செலவாகும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர்.
அதேநேரத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தடையின்மை சான்று வழங்கி, மேம்பாலத்தை எப்படி அமைக்க வேண்டும் என்ற ஆலோசனை வழங்கினால்தான் திட்ட வடிவமைப்பை முழுமை செய்ய முடியும். இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரை அணுகி வருகிறார்கள்.
அதிருப்தி
ஆனால் மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்களது வழித்தடம் இன்னும் அதிகாரபூர்வமாக வரையறுக்கவில்லை. மெட்ரோ தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகே, நீலாம்பூர் வரையிலான நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்ய முடியும் என்று மெட்ரோ நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கு முன்பு பணிகள் தொடங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதால் கோவை மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications