பலாத்காரம் செய்து கொடூரம்.. இரண்டரை வயது அம்ருதா கொலையில் சிக்கினான் தாய்மாமன்!
குழந்தை அம்ருதாவை கொன்றது யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Recommended Video

கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்த தம்பதி கனகராஜ் - காஞ்சனா. கனகராஜ், ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை.. பெயர் அம்ருதா!
விளாங்குறிச்சியில் தோட்டத்துப் பகுதியில் நேற்று முன்தினம் இவர்கள் தங்கி இருந்தனர். வீட்டிற்கு உறவினர்கள் சொந்தக்காரர்கள் வந்திருந்த நிலையில், எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு, படுக்க போனார்கள்.
தம்பதி இருவரும் குழந்தையுடன் வீட்டுக்கு உள்ளே தூங்கினார்கள். வந்திருந்த சொந்தக்காரர்களில் சிலர் வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலில் தூங்கியுள்ளனர். ஆனால் பொழுது விடிந்து பார்த்தால், குழந்தையை காணவில்லை. இதனால் பதறியடித்து கொண்டு அந்த பகுதி முழுவதும் குழந்தையை தேடி அலைந்தனர்.

அம்ருதா
அப்போது, வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில், கருவேலங்காட்டுப் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதாவை சடலமாக மீட்டனர். வீட்டுக்கு உள்ளே தூங்கி கொண்டிருந்த குழந்தை எப்படி இறந்தது? அல்லது குழந்தையை யாராவது கிணற்றில் வீசி விட்டார்களா? என்று பீளமேடு போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

பரபரப்பு
நேற்று காலை முதல், இன்று மதியம் வரை இது பற்றின ஒரு துப்புகூட இவர்களுக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது சம்பந்தமான பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளன. குழந்தையின் தாய் காஞ்சனாவின் உறவினர்தான் இந்த கொலையை செய்தாராம். அவர் பெயர் ரகுநாத்!

ரகுநாத்
காஞ்சனாவின் பெரியப்பா மகனாம். சம்பவம் நடந்த அன்று வீட்டுக்கு வந்திருந்த சொந்தக்காரர்களில் ரகுநாத்தும் ஒருவர். எல்லோரும் சேர்ந்து உறங்கும்போது ரகுநாத்தும் சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளார். உள்ளே ரூமில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை மறைவான இடத்துக்கு தூக்கி சென்றுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்
தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளார். அப்போது குழந்தை அழ ஆரம்பித்துள்ளாள். சத்தம் கேட்டு யாராவது எழுந்து வந்துவிடுவார்களோ என்று நினைத்து, அதன் வாயை பொத்தியுள்ளார். இதில், குழந்தை மயங்கிவிட்டது.

பீளமேடு போலீஸ்
இதை பார்த்து பதறி போன ரகுநாத், என்ன செய்வது என தெரியாமல் குழந்தையை பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளார். இந்த தகவல்கள் அனைத்தும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரகுநாத்தை பீளமேடு போலீஸார் கைது செய்தனர். இரண்டரை வயது குழந்தை எப்படி இறந்தது என்றே தெரியாமல் மக்கள் குழம்பி இருந்த நிலையில், பாலியல் தொல்லை கொடுத்து கொன்றுள்ளது அதிர்ச்சியில் அனைவரையும் ஆழ்த்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications