ஒரு வார சிறை வாசம்.. வெளியே வந்ததும் MyV3 Ads சக்தி ஆனந்த் பரபர ஆடியோ! என்ன சொல்லி இருக்கார்
கோவை: கைது செய்யப்பட்ட MY V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள புது ஆடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.
கோவையில் மை வி3 ஆட்ஸ் என்ற நிறுவனத்தைச் சக்தி ஆனந்த் என்பவர் நடத்தி வருகிறார். இவர் விளம்பரத்தைப் பார்த்தால் காசு தருகிறோம் என்று சொல்லி பொதுமக்கள் பலரிடம் இருந்தும் முதலீடுகளைப் பெற்றுள்ளார். சொன்னபடி பணம் கொடுத்தும் வந்துள்ளார்.

இதற்கிடையே இவரது நிறுவனம் மோசடி செய்வதாகக் கடந்த மாதம் இவர் மீது புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய போது, திடீரென இவருக்கு ஆதரவாகப் பல ஆயிரம் பேர் நீலாம்பூர் சாலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கதிர் ஆனந்த்: பொதுமக்கள் பலரும் கதிர் ஆனந்த்திற்கும் இந்த மை வி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கும் ஆதரவாகவே கருத்துகளைக் கூறினர். தாங்கள் லட்சக் கணக்கில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்த மக்கள், இதுவரை சொன்னபடி பணம் வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இது நிலைமை எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே காட்டுகிறது. பல நூறு பேர் பல லட்சம் வரை முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்கள் எந்த மோசடியையும் செய்யவில்லை என்ற கூறும் சக்தி ஆனந்த், இது பொய் புகார் என்றும் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் கூட முதலீடுகள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். விசாரணை முடிந்ததும் அப்போது போலீசார் அவரை அனுப்பி வைத்த போதிலும் அனுமதி இல்லாமல் கூட்டத்தைக் கூட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது: இதற்கிடையே சில நாட்கள் கழித்து தங்கள் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக்தி ஆனந்த் கடந்த 10ஆம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அப்போது அவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். இடையில் இந்த மை வி3 ஆட்ஸ் செயலி முடக்கப்பட்ட நிலையில், பிறகு புதிய நபர்கள் இணைய முடியாத வகையில் கட்டுப்பாடுகளுடன் அது இயங்க தொடங்கியது.
புது ஆடியோ: தொடர்ந்து அவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன்படி கோவை மத்தியச் சிறையில் இருந்து நேற்றிரவு விடுதலை செய்யப்பட்ட சக்தி ஆனந்தன் வெளியே வந்த சில மணி நேரங்களில் "தலைவர் is back" எனத் தலைப்பிட்டு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில் அவர், "வணக்கம்.. நமது நிறுவனத்திற்கு எதிராகப் பல நபர்கள் பல விதங்களில் இடைஞ்சல் செய்தாலும் சட்டத்தின் துணை கொண்டும் தர்மத்தின் துணை கொண்டும் மக்கள் சக்தி கொண்டு அனைத்தையும் முறியடிப்போம். நிறுவனத்தின செயல்திட்டம், நமது நோக்கம், லட்சியம் என்னவோ அதை நோக்கி நிறுவனம் நடைபோடும். இதுபோன்ற தடைகளை உடைத்துத் தான் பிஸ்னஸை வெற்றிகரமாக நடத்த வேண்டி இருக்கிறது.
கவலை வேண்டாம்: இதற்குத் தேவையான நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்து வருகிறது. பாசிட்டிவாக தான் இதுவரை இருக்கிறது. யாரும் எதுவும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் சிறப்பாகவும் சரியாகவும் நடந்து வருகிறது. நீங்களும் உங்கள் பிஸ்னஸை சிறப்பாகச் செய்யுங்கள்.. நீங்கள் செய்வதைத் தொடர்ந்து செய்யுங்கள். அத்தனை தடைகளையும் நாங்கள் முறையாக வெல்வோம். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லாம் சரியாக இருக்கிறது. .பொதுமக்கள் கவலைப்பட எதுவும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications