லஞ்சத்தை அப்படியே பேன்ட் பாக்கெட்ல வைங்க.. வசமாக சிக்கிய கோவை பேரூர் தாசில்தாரர்
கோவை: தமிழ்நாடு அரசுத்துறைகளில் லஞ்சம் அதிகரித்துள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கோவையில் கடந்த வாரம் இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும், களவுமாக பிடிபட்டார். இந்நிலையில் பேரூர் தாசில்தார் ரமேஷ்குமார் லஞ்சம் வாங்கும்போது வசமாக சிக்கியுள்ளார். ரூ.50,000 லஞ்சம் வாங்கும்போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
கோவை பேரூர் தாலுகா மாவட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. அங்கு புகழ் பெற்ற பேரூர் கோயில், ஈஷா யோகா மையம், காருண்யா கல்வி நிறுவனம், வெள்ளியங்கிரி மலை கோயில், கோவை குற்றலாம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் அபரிமிதமான வளர்ச்சியை பேரூர் பெற்று வருகிறது. இதனால் பேரூர் தாலுகா அலுவலகத்துக்கு தினசரி ஏராளமான மக்கள் வருவது வழக்கம்.

ஒப்புதல்
ரமேஷ் குமார் என்பவர் தாலுகா தாசில்தாரராக உள்ளார். அங்கு ரஞ்சித் குமார் என்கிற தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஆவண விடுவிப்பு தொடர்பாக விண்ணபித்துள்ளார். அதற்கு கீழ்நிலை ஊழியர்களால் ஆவணங்கள் அளித்து ஒப்புதல் கொடுத்துவிட்டனர். ஆனால் இறுதி ஒப்புதல் மட்டும் கொடுக்காமல் காத்திருப்பில் வைத்துள்ளனர்.
50 ஆயிரம் லஞ்சம்
இதுதொடர்பாக ரஞ்சித் குமார், தாசில்தாரர் ரமேஷ் குமாரை சென்று சந்தித்துள்ளார். அப்போது ஒப்புதல் கொடுக்க ரூ.50,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ரமேஷ் குமார், ரஞ்சித்திடம் கூறியுள்ளார். இதற்கு ரஞ்சித் தயங்கிய போதும் ரமேஷ் குமார் லஞ்சம் வேண்டும் என்று கறாராக கூறியுள்ளார். கடந்த 21 மற்றும் 25 ஆகிய 2 தேதிகளை ரஞ்சித் ரமேஷ் குமாரை சந்தித்துள்ளார்.
ரசாயனம் தடவிய ரூபாய்
அப்போது அவர் 25 ஆம் தேதி (இன்று) ஒப்புதல் கொடுப்பதற்காக அலுவலகம் வந்து ரூ.50,000 லஞ்சம் கொடுக்க ரமேஷ் குமார் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக ரஞ்சித் குமார் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் ரஞ்சித் குமார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றுள்ளார்.
பாக்கெட்டில் வைத்த லஞ்சம்
அங்கு ரமேஷ் குமாரின் உதவியாளர் சரவணன் என்பவர் லஞ்சப் பணத்தை தனது பேன்ட் பாக்கெட்டில் வைக்க சொல்லியிருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நுழைந்து ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பேரூர் தாலுகா அலுவலகத்தில் வைத்தே பணம் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
லஞ்சப் பணம்
அதில் லஞ்சப் பணமாக கொடுக்கப்பட்டது, அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகள் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் பேரூர் தாசில்தாரர் ரமேஷ் குமார் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications