கோவையில் உல்லாசம்.. 40 வயது தொழிலதிபர்களின் மனைவி மட்டுமே குறி.. யாரிந்த இளைஞர்? இப்படி ஒரு பெண்ணா?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை இளைஞருக்கு தொழிலதிபர் மனைவிகள் மட்டுமே குறி.. அதிலும் 40 வயது பெண்கள் மட்டுமே குறி... வலிய வலிய சென்று நட்பாக பேசி, நெருக்கமாக பழகி போட்டோ எடுத்து, அந்த போட்டோக்களை வைத்து மிரட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளார் இந்த கோவை இளைஞர்.. இது தொடர்பான விசாரணையை கோவை போலீசார் துவங்கியபோது, பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. என்ன நடந்தது? யாரிந்த இளைஞர்?

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த தொழிலதிபருக்கு 45 வயதாகிறது.. இவரது மனைவி, பிள்ளைகள் கோவையில் வசித்து வருகிறார்கள்.. எனவே வாரம் ஒருமுறை குடும்பத்தை பார்க்க கோவை வந்து செல்வார் தொழிலதிபர்.

தொழிலதிபர் குடும்பம்

இந்நிலையில் கடந்த மாதம் செல்போன் ஆப் மூலம், தொழிலதிபருக்கு போன் ஒன்று வந்துள்ளது.. அதில் பேசிய நபர், "உன்னுடைய மனைவி, பிள்ளைகளை பார்க்க கோவைக்கு இனிமேல் வரக்கூடாது, அப்படி வந்தால் கொன்றுவிடுவேன், சென்னைக்கு வந்து கொலை செய்து விடவும் தயங்க மாட்டேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதைக்கேட்டு தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்து, தனக்கு வந்த செல்போன் நம்பர் குறித்து விசாரணை மேற்கொண்டார்.. ஆப் மூலம் தனக்கு போன் செய்து மிரட்டியது கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஸ்வீட்சன் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. உடனே இது குறித்து தொழிலதிபர் சென்னை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினார்கள்..

ஜன்னல் வழியே குதித்து ஓட்டம்

நாராயணன் என்ற பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டை பயன்படுத்தி ஸ்வீட்சன், தொழிலதிபரை மிரட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்வீட்சனை கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்தனர்.. ஆனால்,
ஸ்வீட்சன் போலீசாரை பார்த்ததுமே, வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஸ்வீட்சன் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கியபோது, அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

இது குறித்து போலீசார் சொல்லும்போது, "சரவணம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில் இசை பிரிவில் உதவியாளராக ஸ்வீட்சன் வேலை பார்த்து வருகிறார். ஏற்கனவே சிங்காநல்லூரிலுள்ள ஒரு கம்பெனியில் பணிபுரியும்போது சென்னை தொழிலதிபரின் மனைவியும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகளுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தை பயன்படுத்தி ஸ்வீட்சன் தொழிலதிபர் மனைவியுடன் நெருக்கமாக போட்டோக்களை எடுத்துள்ளார்..

ஆபாச போட்டோக்கள்

அந்த ஆபாச போட்டோக்களை காண்பித்து, பணம், நகைகளை மிரட்டி பெற்றிருக்கிறார்.. இந்த விஷயம், தொழிலதிபரின் மனைவியின் அப்பாவுக்கு தெரிந்துள்ளது.. உடனே ஸ்வீட்சனை கண்டித்திருக்கிறார்..
இதனால் ஸ்வீட்சன் சிறிது நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும், தொழிலதிபர் மனைவியிடம் காதலிப்பதாக கூறி நெருங்கியிருக்கிறார். வசதிபடைத்த தொழிலதிபர்களின் மனைவிகளுக்கு மட்டுமே ஸ்வீட்சன் குறி வைத்து, பணம், நகைகளை பறித்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலதிபர்களின் மனைவிகள் மட்டுமே இவருக்கு குறி.

உடந்தையாக மனைவி

தொழிலதிபர்களின் மனைவியை குறிவைத்து பணம் பறித்து வரும் ஸ்வீட்சன்னுக்கு அவரது குடும்பத்தினரே பக்கபலமாக இருந்து வந்துள்ளனர்... குறிப்பாக, ஸ்வீட்சன்னுக்கு இந்த மோசடியில் உதவியாக அவரது மனைவி இருந்துள்ளார்.. உல்லாச வாழ்க்கை வாழ பல பெண்களிடம் பேசுவதற்கு பல உதவிகளை, ஸ்வீட்சன் மனைவி செய்திருக்கிறார்..

இரவு நேரங்களில் தன்னுடைய மனைவி இருக்கும்போதே, பல பெண்களிடம் வீடியோ காலில் பேசி, அந்த வீடியோ, போட்டோக்களையும் எடுத்து வைத்துள்ளார். தற்போது ஸ்வீட்சன்னின்மனைவி, குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். ஸ்வீட்சன்னை கைது செய்யவும் முயன்று வருகிறோம்" என்றனர்.

உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக, கணவனுக்கு மனைவி உட்பட குடும்பமே உடந்தையாக இருந்து, இப்படியான கேவலமான செயல்களில் இறங்கியிருப்பது கோவை மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+