இலங்கையில் 50 ஆண்டுக்கு முன் ரூ.37 திருடிய வீட்டை கண்டுபிடித்து கோவை தொழிலதிபர் செய்த செயல்.. செம
கோவை: இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டில் 37 ரூபாய் 50 காசு திருடிய 10 வயது சிறுவன் தற்போது கோவையில் தொழிலதிபராக உள்ளார். இந்த திருட்டு சம்பவம் அவரது மனதை உறுத்திய நிலையில் அந்த வீட்டின் வாரிசுகளை தேடிக்கண்டுபிடித்து ரூ.3 லட்சம் திருப்பி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் பணியாளர்களாக இருந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி எழுவாய். இவர்கள் 2 பேரும் 1970 ம் ஆண்டில் அங்கிருந்த வீட்டை காலி செய்தனர்.

வீடு காலி செய்தபோது உதவிக்காக பக்கத்து வீட்டை சேர்ந்த 10 வயது சிறுவன் ரஞ்சித்தை அழைத்தனர். ரஞ்சித் அந்த தம்பதிக்கு உதவி செய்தார்.
இந்த சமயத்தில் தலையணைக்கு அடியில் 37 ரூபாய் 50 காசு இருந்ததை ரஞ்சித் பார்த்தார். தனது குடும்பம் வறுமையில் வாடியதை நினைத்த அவர் சுப்பிமணியம் - எழுவாய் தம்பதிக்கு தெரியாமல் ரூ.37.50யை திருடி வைத்து கொண்டார். அதன்பிறகு 1977ம் ஆண்டில் தனது 17 வயதில் ரஞ்சித் பிழைப்பு தேடி தமிழகம் வந்தார்.
கோவையில் அவர் பல்வேறு பணிகளை செய்தார். வறுமையில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு தற்போது தொழிலதிபராக உள்ளார். ரஞ்சித் தற்போது கோவையில் கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இருப்பினும் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதி வீட்டில் 37.50 காசு திருடிய சம்பவம் உறுத்தி கொண்டே இருந்தது. எப்படியாவது அந்த பணத்தை கொடுத்து விட வேண்டும் என்று ரஞ்சித் முடிவு செய்தார்.
இதையடுத்து சுப்பிமணியம் - எழுவாய் தம்பதி பற்றி அவர் விசாரித்தார். அப்போது அந்த தம்பதி இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். சமீபத்தில் இலங்கை சென்ற ரஞ்சித் அங்கிருந்த சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் 3 மகன்களின் குடும்பத்துக்கு தலா ரூ.70 ஆயிரம் வழங்கினார். அதோடு புத்தாடைகளும் வாங்கி கொடுத்தார்.

மேலும் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் மகள் செல்லம்மாள் திருச்சியில் இருப்பதை அறிந்த ரஞ்சித் அங்கு சென்று அவருக்கு புத்தாடை வழங்கியதோடு ரூ.70 ஆயிரத்தை வழங்கினார். இப்படியாக இலங்கையில் திருடிய 37.50 ரூபாய்க்காக 50 ஆண்டுகள் கழித்து பணத்தை இழந்த தம்பதியின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சத்தை ரஞ்சித் வழங்கிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
இதற்கிடையே தான் கோவையில் உள்ள ரஞ்சித்தை, சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் பேத்தி பவானி சந்தித்து நன்றி கூறினார். அப்போது அவர், ‛‛அவர் (ரஞ்சித்) வீட்டில் காசு எடுத்ததாகவும், அதனை திரும்ப தருவதாகவும் கூறினார். அதை கேட்டு நான் ஷாக் ஆகிவிட்டேன். இந்த காலத்தில் இப்படியொரு ஆளா? ரொம்ப சந்தோஷமாக இருந்தது'' என்றார்.
இதுதொடர்பாக ரஞ்சித் கூறுகையில், ‛‛நான் பணத்தை அவர்களின் வாரிசுகளுக்கு கொடுத்த தருணம் எதிர்பாராத ஒன்று. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒருவருக்கொருவர் பார்த்தபோது பண சந்தோஷத்தை விட.. மன சந்தோஷம் ஜாஸ்தியாக இருந்தது. அதனை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. எனக்கு கடன் என்று யாரிடமும் இருக்க கூடாது. இதனால் தான் பணத்தை தேடி கொண்டு போய் கொடுத்தேன்'' என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications