NEED to KNOW" திட்டம்.. பாலக்காடு மாடல்.. தெரியுமா? கோவை கார் வெடிப்பில் அண்ணாமலையின் பரபர புகார்!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

என்ஐஏ இது தொடர்பாக விசாரணையில் குதித்து உள்ளது. உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. சரியாக கோவிலுக்கு முன் கார் வெடித்த காரணத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அண்ணாமலை

அண்ணாமலை

இந்த நிலையில் அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், பாலக்காடு மாடல் என்பதை குறிப்பிட்டு உள்ளார்.

என்ஐஏவிற்கு முன்பே அனுமதி கொடுத்து இருந்தால் இந்த பிரச்சனை வந்து இருக்காது. பாலக்காடு மாடல்தான் தென்னிந்தியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய தீவிரவாத மாடல். இவர்கள் இருக்கும் இடம் பாலக்காடு என்பதால் கோவையிலும் இவர்களின் ஆக்டிவிட்டி இருக்கிறது. பார்டரில் இருப்பதால் கோவையிலும் சிக்கல் உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் ஒருவரை கைது செய்துள்ளனர். ஈரோட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

3 மாதங்களுக்கு முன்பாகவே இந்த கைதுகள் நடந்து உள்ளன. எங்களுக்கே அது பெரிய ஆச்சர்யமாக உள்ளது. அப்போது நாங்கள் இதை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் இப்போது இதை சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த கும்பல் சேலம், ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. நிலைமை மோசமாகிக்கொண்டு இருக்கிறது. இவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை.

போலீஸ்

போலீஸ்

போலீஸ் நினைத்தால் இதை கட்டுப்படுத்தலாம். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஒரு மனிதர் 50 கிலோ பொட்டாசியம் வாங்க முடியாது. இதற்கு பின் பலர் இருக்கலாம். இதை அவர் need to know basis அடிப்படையில் செய்கிறார்கள். அதாவது கார் ஒருவருடையது, வெடிமருந்து ஒருவருடையது, பால் ரஸ் ஒருத்தருடையது, ஆணி ஒருத்தருடையது. இதுதான் அவர்களின் திட்டம்.

பிளான்

பிளான்

ஒருவரின் பிளான் இன்னொருவருக்கு தெரியாது. அப்படி தெரிந்தால் திட்டம் குழம்பிவிடும். அதனால் இதை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள். ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு. டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு காமெடியாக இருக்கிறது, என்று அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+