குழந்தைகளை கூட அடிக்கமாட்டாரே! அவரா இப்படி? என் பெண்ணை ஏமாத்திட்டாரு.. ஜமேஷா முபினின் மாமனார் கண்ணீர்
கோவை: குழந்தைகளை கூட அடிக்காத முபினா இப்படி எல்லாம் செய்துள்ளார் என்பதை நினைக்கும் போது எங்கள் நெஞ்சம் பதறுகிறது என முபினின் மாமனார் தெரிவித்துள்ளார்.
கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் மாமனார் ஹனிபா தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: திருமணத்திற்கு பின்பு பெற்றோருடன் முபின் வசித்து வந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முபின் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவரை விடுவித்தனர். எனினும் அப்போது முதலே முபினை அவரது பெற்றோர் தள்ளி வைத்துவிட்டார்கள்.

மாமனார் வீடு
மாமனார் வீட்டிலேயே தங்கிக் கொள் என கூறிவிட்டார்கள். இதனால் நாங்கள் குடியிருக்கும் வீட்டில்தான் முபின் தங்கியிருந்தார். பின்னர் தற்போது தங்கியிருந்த வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சென்றார். அவர் குழந்தைகளை அடித்ததில்லை. ஆனால் அவர் குறித்த தகவல்களை பார்க்கும் போது தற்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

முபின் கார் ஓட்ட பழகுதல்
கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் முபின் கார் ஓட்டவே பழகினார். அவரிடம் கார் வாங்கும் அளவுக்கெல்லாம் காசு கிடையாது. கார் ஓட்ட கேட்டது குறித்து முபின், வேலை இல்லாததால் ஆக்டிங் டிரைவராக செல்வதற்காக கார் ஓட்ட பழகினேன் என தெரிவித்தார். சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட எங்கள் வீட்டிற்கு வந்தார்.

முபினை பார்க்க நண்பர்கள் இல்லை
முபினை பார்ப்பதற்கு அவருடைய நண்பர்கள் என கூறி யாரும் வீட்டிற்கு வந்ததில்லை. அவருடன் உறவினர்களான அசாருதீன், அப்சர்கான் மட்டுமே உடனிருந்தார்கள். வீட்டில் இருந்த பெட்டிகள் குறித்து எங்கள் மகள் கேட்ட போது அவை நாட்டு மருந்து. தேன் வியாபாரம் செய்து வருவதாகவும் முபின் என் மகளிடம் தெரிவித்துள்ளார். நாட்டு மருந்துகளை வாங்குவதற்காக அடிக்கடி கேரளா சென்று வருவதாகவும் முபின் தெரிவித்ததாக அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் வெடிப்பு
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் தெரு அருகே கடந்த 23 ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இந்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இவரது வீட்டில் உக்கடம் போலீஸார் சோதனையிட்ட போது 100 கிலோ வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழகத்தில் மொத்தம் 6 இடங்களில் நாசவேலைகளை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் காவல் துறை தெரிவித்திருந்தது.

6 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக முபினுக்கு நெருக்கமானவர்கள் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது கூட்டம் கூடும் இடத்தில் வெடி பொருட்களை வெடிக்கச் செய்ய முபின் திட்டமிட்டிருந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காரில் எடுத்து செல்லப்பட்ட வெடி பொருள்
இந்த வெடிபொருட்கள் அனைத்துமே குறைந்த திறனுடையது என காவல் துறை கூறியுள்ளது. மேலும் அந்த வெடிபொருட்களை முபின் ஆன்லைன் மூலம் வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த 22 ஆம் தேதி இரவு வெடிபொருட்களை 5 பேருடன் காரில் வைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்ஐஏ விசாரணையில் மேலும் பல திடுக் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications