கடலூர் சித்ரா தந்த புகார்.. கோடிகளில் தங்க நகைகள்.. கோவையில் இரண்டு பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு சிக்கல்
கோவை: கோவை நகர சைபர் கிரைம் போலீசில் இன்ஸ்பெக்டராக மல்லிகா என்பவர் பணியாற்றி வந்தார். இவர், தற்போது திருப்பூர் சிறப்பு புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இதேபோல் கோவை நகர குற்றப்பிரிவு (சி.சி.பி.) போலீசில் கலையரசி என்பவர் பணியாற்றி வந்தார். அவர், தற்போது விழுப்புரம் மாவட்டம் கிள்ளியனூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் விசாரணை என்ற பெயரில் பெண்ணிடம் நகை, பணத்தை பறித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடலூரை சேர்ந்த சித்ரா என்பவர், கோவை மாவட்டட லஞ்ச ஒழிப்பு போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் இன்ஸ்பெக்டராக மல்லிகா என்பவர் பணியாற்றி வந்தார். இவர், தற்போது திருப்பூர் சிறப்பு புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இதேபோல் கோவை நகர குற்றப்பிரிவு (சி.சி.பி.) போலீசில் கலையரசி என்பவர் பணியாற்றி வந்தார். அவர், தற்போது விழுப்புரம் மாவட்டம் கிள்ளியனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நான் முன்பு கோவை மாநகரத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் வசித்து வந்தேன்.

ஒருவர் என்னிடம் ரூ.50 லட்சம் கடன் வாங்கிவிட்டு, அதனை திருப்பி தரவில்லை. ஆனால் அவர் எனக்கு எதிராக நகர குற்றப்பிரிவு போலீசில் பொய்யான புகார் செய்தார். இதுகுறித்து என்னிடம் நகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்வதாகவும் என்னை மிரட்டினார்கள். ஒரு கட்டத்தில் என் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார்கள்.
நான் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்து, நீதிமன்றத்தை அணுகுவேன் என்று கூறியதால், நாங்கள் கொடூரமான வன்முறைக்கு ஆளானோம். என் 19 வயது மகளும் விசாரணை என்ற பெயரில் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். நடந்த சம்பவங்கள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் செய்தேன். போலீஸ் மிரட்டியதால் ரூ.8 லட்சத்தை ரொக்கமாகவும், வங்கி பரிமாற்றம் மூலமும் நான் கொடுத்தேன். கடந்த 9.1.2018 அன்று இன்ஸ்பெக்டர் கலையரசி, போலீஸ் குழு மூலம் விசாரணை என்ற பெயரில் என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். எனது சொத்து விவரங்கள் குறித்து மிரட்டி எழுதி வாங்கினார்கள். வீட்டில் சோதனை என்ற பெயரில் 375 பவுன் தங்கநகை, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். எனது நகைகளுக்கான நிதி ஆதாரம் குறித்து கேட்டார்கள். இதற்கான ரசீதுகளை கொடுத்தேன்.
பின்னர் மற்றொரு இன்ஸ்பெக்டர் மல்லிகா கடந்த 2018, ஜனவரி மாதம் 18-ந்தேதி 7 நாட்கள் என்னை காவலில் வைக்க நடவடிக்கை எடுத்தார். அப்போது ஜாமீனில் வெளிவர லஞ்சம் கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கு மறுத்த போது நான் தாக்கப்பட்டேன். தலைமுடியை பிடித்து தரையில் இடித்ததால் மயக்கமானேன். மறுநாள் வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை அவர்கள் பறிமுதல் செய்தார்கள். மேலும் பணம் கொடுக்குமாறும் தொடர்ந்து மிரட்டினார்கள். இதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மிரட்டியதால் அவர்களுக்கு அடிபணிய வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. என்னிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள தங்கநகைளையும், அவர்கள் லஞ்சமாக பெற்றவற்றையும் மீட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி விசாரணை நடத்தினார். லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின்படி இன்ஸ்பெக்டர் கலையரசி, மல்லிகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. காவல்துறை உள்பட அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தால், உடனே வழக்கு பதிவு செய்துவிட முடியாது. அதற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும். அந்த வகையில் இன்ஸ்பெக்டர் கலையரசி, மல்லிகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய அரசின் இணைச்செயலாளர் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 17 ஏ (1) பிரிவின் கீழ் முன் அனுமதி வழங்கி உள்ளார். 2 பெண் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications