கோயில் வருவாய் பிரச்சனை: லஞ்சம் வாங்கிய கோவை அறநிலையத் துறை உதவி ஆணையர் கைது
கோவை: கோவையில் தனியார் கோவிலை இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் இந்திரா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் இந்திராவிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரித்து வரும் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிரது. இந்தக் கோவிலில் ஆண்டு வருமானமாக 40 லட்ச ரூபாய் வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கோவிலில் வருவாய்ப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. நிதி மேலாண்மை முறையாக இல்லை என்பதால் இந்த கோவிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என அதன் நிர்வாகிகளில் ஒருவரான சுரேஷ்குமார் என்பவர் இந்து சமய அறநிலையத் துறையில் மனு அளித்திருந்தார்.

மதுரை உயர் நீதிமன்றமும் இது தொடர்பாக 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சுரேஷ்குமார் மனு மீது நடவடிக்கை எடுத்து, கோவிலை இந்து சமய அறநிலைய துறையின் கீழ் கொண்டு வருவதற்கு மூன்று லட்ச ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என உதவி ஆணையர் இந்திரா கேட்டுள்ளார்.
ஆனால், சுரேஷ்குமார் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து, இறுதியாக 1.5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுக்க வேண்டும் என இந்திரா தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்று இரவு இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் அருகில் உள்ள பாரதியார் சாலையில், ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை சுரேஷ்குமாரிடம் இருந்து உதவி ஆணையர் இந்திரா வாங்கியுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் உதவி ஆணையர் இந்திராவை கைது செய்தனர். உதவியாளர் இந்திரா லஞ்சம் வாங்கும் காட்சிகள் அங்கு இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருந்தது. இந்நிலையில், கையும் களவுமாக உதவி ஆணையர் இந்திராவை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத் துறையின் உயரதிகாரி நேரடியாக லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்தத் துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications