Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டுக்கறி விலை மளமள உயர்வு.. ஆந்திராவை மலைக்க வைத்த மட்டன்! மதுரை, கோவையில் கோழிக்கறி ரேட் எகிறியது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இறைச்சி விலை ராக்கெட் வேகத்தில் எகிறிவிட்டது.. கடந்த ஒரு வார காலமாகவே கால்நடை சந்தைகளில் ஆடு, கோழிகளின் விலைகள் அதிகரித்தே காணப்பட்டது. நாளை பொங்கல் பண்டிகை என்பதால், இறைச்சி விலை கூடுதலாக உள்ளது.

கோவை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு முன்பு பிராய்லர் கோழி கறி கிலோ 210 ரூபாய்க்கும், நாட்டு கோழி கறி கிலோ 600 ரூபாய்க்கும், ஆட்டிறைச்சி கிலோ 1000 முதல் 1200 ரூபாய் வரையிலும், சிறிய வஞ்சிரம் மீன் கிலோ 700 ரூபாய் முதல், மத்தி மீன் கிலோ 240 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.. இந்த விலை உயர்வு நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாளை இன்னும் விலை உயரக்கூடும் என்கிறார்கள்,.

Coimbatore Kovai Mutton Chicken

கோவை, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்து அதிக ஆடுகள் விற்பனையாகும் ஆறுமுகநேரி ஆட்டுச்சந்தை பிரசித்தி பெற்றது. இங்கு வார சந்தையில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.,.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு அடுத்த நாள் பொதுமக்கள் பெரும்பாலும் இறைச்சி சமைத்து சாப்பிடுவார்கள். இதனால் கோடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, வேலி ஆடு, செம்மறி ஆடுகள் சுமார் 900 எடுக்கப்பட்டன.

ஆட்டுக்கறி விலை

ஸ்ரீவைகுண்டம், ஏரல், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். 10-12 கிலோ எடையுள்ள வெள்ளாடுகள் ரூ.15,000-20,000 வரை விற்பனையாகின.மொத்தம் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது, சில ஆடுகள் ரூ.2,000-3,000 கூடுதலாக விற்கப்பட்டன.

சந்தையில் வான்கோழி மற்றும் நாட்டு கோழிகளும் விற்பனைக்கு வந்தனர்; வான்கோழி ரூ.3,500, நாட்டுக்கோழி ரூ.450 விற்பனை செய்யப்பட்டது.

கோழிக்கறி விருதுநகர்

அதேபோல விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வீரசோழனில் நடைபெற்ற வார சந்தையில் 10 கிலோ அடங்கிய ஆடுகளுக்கான விலை ₹12,000 முதல் ₹15,000 வரை இருந்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக விலையை கருதி சந்தைக்கு வராமலிருந்து ஆடு விற்பனை மந்தமாகி, எதிர்பார்த்த அளவு வர்த்தகம் நடைபெறாமல் சந்தை வெறிச்சோடியதாக இருந்தது. சிலர் மட்டுமே உயர்ந்த விலையை பொருட்படுத்தாமல் ஆடுகளை வாங்கினர். பொதுவாக ஆட்டுக்கறி ₹800-₹900 ஆக விற்பனை செய்யப்படுகிறது..

ஆந்திரா ஆட்டுக்கறி

ஆனால் தமிழகத்தை விட ஆந்திர மாநிலத்தில் இறைச்சி விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டதாம்.. கோழி மற்றும் ஆட்டிறைச்சி விலை பண்டிகை மற்றும் தொடர்விடுமுறை காலத்தைக் காரணமாக திடீரென அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோ தோல் நீக்கப்பட்ட கோழிக்கறி ரூ.230-240 இருந்தது, தற்போது அது ரூ.330-340 வரை உயர்ந்துள்ளது. ஹைதராபாத், விஜயவாடா மற்றும் வாரங்கல் போன்ற நகரங்களில் கோழிக்கறி விலை அதிகமாக விற்கப்படுகிறது.

ஆட்டிறைச்சியின் விலை பொதுவாக ரூ.800 ஆக இருந்தது, ஆனால் இப்போது எலும்புடன் கூடியது ரூ.1,050, எலும்பில்லாதது ரூ.1,250 வரை உயர்ந்துள்ளது. பண்டிகை காலங்களில் தேவையால் விற்பனை அதிகமாக உள்ளது. வளர்ப்பு கோழிகளின் விலை சில இடங்களில் ரூ.2,500 வரை சென்றுள்ளதையும், கிராமங்களில் கோழிகள் குறைவாக இருப்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சாதாரண மக்கள் அதிக செலவில் தான் அசைவ உணவை வாங்க வேண்டும். ஆனால் அசைவம் விரும்பும் மக்கள், விலை உயர்ந்தாலும் பண்டிகைக்காக இறைச்சி சாப்பிடுவதாக தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+