"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை சூலூரில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்தி தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையில் அவரை சக கைதிகள் தாக்குதல் நடத்தியதால் அவர் காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் கடந்த 21 ஆம் தேதி மாலை தனது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி மாயமானார். அவரை அக்கம்பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை.

Coimbatore Sulur girl murder

இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமி தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி கண்ணன்பாளையம் குளக்கரையில் ஒரு முட்புதரில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், கார்த்தி, மோகன்ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர். கார்த்தி, சிறுமியின் குடும்பத்தினர் இருக்கும் வீட்டுக்கு பக்கத்து வீட்டு நபர் என விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் கார்த்தியை போலீஸார் பிடிக்க சுற்றி வளைத்த போது அவர்களிடம் இருந்து தப்பிக்க மேல் மாடியில் இருந்து குதித்தபோது கார்த்திக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து இவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைக் கைதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதால் அவர் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதை அறிந்த கைதிகள், சிறையில் வைத்து கார்த்தியை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

கைதானவர் வாக்குமூலம்

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி கொடுத்த வாக்குமூலம் குறித்து போலீஸார் கூறியதாவது: கடந்த 21 ஆம் தேதி வீட்டின் முன்பு அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி கார்த்தி அழைத்து சென்றுள்ளார். வழியில் சாக்லேட், மிட்டாய் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு பிறகு மீண்டும் வீட்டிற்கு செல்லலாம் என வண்டியில் அமர வைத்து குளக்கரைக்கு அழைத்து சென்றாராம்.

அங்கு சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போது குழந்தை கத்தியதாம். அதற்கு கத்த கூடாது என அந்த குழந்தையை கார்த்தி மிரட்டினாராம். அதையும் மீறி சிறுமி அலறியதால் என்ன செய்வது என்ற பயத்தில் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்த முள் புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இவ்வாறு போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குளக்கரையில் இருந்து சென்ற போது அங்கு அவருடைய நண்பர் மோகன்ராஜை பார்த்து நடந்தவற்றை கூறி கார்த்தி உதவி கேட்டுள்ளார். அவரும் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் உதவி செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+