கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாசலில் சேர் போட்டு உட்கார்ந்த கலெக்டர்.. வெலவெத்த டாக்டர்கள், நர்ஸ்கள்.. பரபரத்த கொரோனா வார்டு

கொரோனா வார்டில் சேர் போட்டு உட்கார்ந்து ஆய்வு செய்தார் கோவை கலெக்டர்

Google Oneindia Tamil News

கோவை: கொரோனா தடுப்பு குறித்த, கோவை மாவட்ட கலெக்டர் மேற்கொண்ட திடீர் அதிரடி நடவடிக்கையானது பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் 2 நாட்களாக வைரலாகி கொண்டிருக்கிறது.

எப்போதுமே தமிழகத்தில் தொற்று பாதிப்பு என்றால், அதில் முன்னணியில் இருப்பது தலைநகரம்தான்.. இந்த முறையும் அப்படித்தான் சென்னை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.

ஆனால், திமுக அரசு விரைந்தும், துரிதமாகவும், அதிரடியாகவும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்து வருவதால், பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது.. அதில் சென்னையும் தற்போது மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருக்கிறது.

 டெல்லி

டெல்லி

எனினும், எதிர்பாராதவிதமாக கோவை தொற்று பாதிப்பில் முதலிடத்தில் வந்துவிட்டது.. கோவையை காப்பாற்றுங்கள் என்று வானதி சீனிவாசன் டெல்லிக்கே லெட்டர் எழுதி கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்நிலையில்தான், முக ஸ்டாலின் கோவைக்கு நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தினார்.. இதையடுத்து, கோவையிலும் தொற்று பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன.

 கலெக்டர்

கலெக்டர்

இப்படிப்பட்ட சூழலில், கலெக்டர் நாகராஜனுக்கு ஒரு புகார் பறந்தது.. ஞாயிற்றுக்கிழமைகளில், அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள், நர்ஸ்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை" என்று தொடர்ச்சியாக கலெக்டருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தது.. இதையடுத்து, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அரசு ஆஸ்பத்திரிக்கு கலெக்டர் நேரடியாகவே சென்றுவிட்டார்..

 ஆஸ்பத்திரி

ஆஸ்பத்திரி

கலெக்டர் வந்து அங்கு நிற்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.. இதனால் ஆஸ்பத்திரியே பெரும் பரபரப்பாகிவிட்டது. சாயங்காலம் 4.40-க்கு கலெக்டர் வந்தார்.. ஆனால், வார்டுகளுக்கு போகவில்லை.. அந்த ஆஸ்பத்திரி கொரோனா வார்டு வாசலிலேயே ஒரு சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார்.. இரவு 8 மணிவரை அங்கேயே உட்கார்ந்திருந்தார்..

 நம்பிக்கை

நம்பிக்கை

அப்போது ஆஸ்பத்திரியில் உயர் மருத்துவ அதிகாரிகள் யாரும் இல்லை.. சேரில் உட்கார்ந்து கொண்டே மருத்துவமனை பணிகளை பார்வையிட்டார்.. அங்கிருந்த ஊழியர்களிடமும் கலந்து பேசினார்.. கலெக்டரின் இந்த திடீர் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை தந்தது.. ஆனால், கோவை மக்கள் மனதில் நம்பிக்கையை தந்தது..!

English summary
Coimbatore collector sits in a chair near corona ward to inspect govt covid facility
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X