குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களை சேர்க்க மறுத்தால் பள்ளிகள் மீது ஆக்ஷன்.. கோவை கலெக்டர் வார்னிங்
கோவை: குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பள்ளியில் சேர்க்க மறுத்தால், பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் இன்று கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டன. 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு உற்சாகமாக மீண்டும் வருகை தந்தனர். அந்த வகையில் கோவையில் திறக்கப்பட்ட பள்ளிகளில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோடை விடுமுறை முடிந்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவியருக்கு இன்று சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 1,187 பள்ளிகளிலும் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களால் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு, இந்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவர்களை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்னும் ஒரு மாதத்தில் முழுமையான கணக்கு தெரியவரும். ஆனால் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
ஜூன் இறுதி வரை சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மாத இறுதியில்தான் மொத்தமான மாணவர்களின் எண்ணிக்கை தெரிய வரும். அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக குறைவான மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவதாக புகார் எழுந்து இருக்கிறது. இதுபோன்று நடைபெறுவதாக தகவல் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து அதற்கான அறிவுரை வழங்கி இருக்கிறோம்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும்போது முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து செல்வது நல்லதுதான். மருத்துவமனை வளாகத்திற்குள் முகக்கவசம் அணிய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications