கோவை மாணவி பாலியல் கொடுமை.. இரவோடு இரவாக சுட்டு பிடிக்கப்பட்ட கொடூரர்கள்! சிக்கியது எப்படி?
கோவை: கோவையில் கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை நள்ளிரவில் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட கொடூரர்கள் யார்? பிடிபட்டது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ள கோவையில் வேலை மற்றும் கல்விக்காக பலர் தங்களது சொந்த ஊர்களை விட்டு அங்கு வசிக்கிறார்கள். இவர்களில் இளம் பெண்களும் தனியாக விடுதிகளில் தங்கியுள்ளனர். அந்த வகையில், மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கோவை விமான நிலையம் அருகே
இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகிறார். இந்த மாணவியும் கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயது இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் நேரில் அடிக்கடி சந்தித்துக்கொண்டதுடன் விடுமுறை நாட்களில் வெளியே சென்று வந்தனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், அந்த மாணவி தான் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து வெளியே வந்தார்.
காதலர்கள் காரில் பல இடங்களுக்கு வெளியே சென்றனர். இரவில் கோவை விமான நிலையம் பின்புறம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக போதையில் வந்த 3 பேர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்றிருப்பதை கண்டு அருகே சென்றனர். அங்கு கல்லூரி மாணவியும் ஒரு ஆணும் இருப்பதை கண்டு, அவர்களை வெளியே வருமாறு மிரட்டி உள்ளனர்.
மது போதையில் தூக்கி சென்று வன்கொடுமை
3 பேரும் சேர்ந்து கார் கண்ணாடியை உடைத்து, அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கி உள்ளனர். அவர் மயக்கமடைந்ததும், மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வன்கொடுமை செய்து விட்டுத் தப்பினர். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
3 பேர் சுட்டு பிடிப்பு
இந்த நிலையில், கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கும்பலை நள்ளிரவில் போலீசார் சுட்டுப் பிடித்தனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற மூன்று பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். குண்டு காயத்துடன் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார்த்தி என்ற காளீஸ்வரன், சதீஷ் என்ற கருப்பசாமி, குணா என்ற தவசி ஆகிய மூன்று பேரும் தான் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டவர்கள் ஆவர்.
சிவகங்கையை சேர்ந்தவர்கள்
இவர்கள் மூன்று பேரும் சிவகங்கை மவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகள அடிப்படையாக வைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மாநர எல்லை, மாவட்ட எல்லை என பல்வேறு பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் லிஸ்ட் உள்ளிட்டவற்றை வைத்து போலீசார் தேடி வந்தனர்.
சிக்கியது எப்படி?
இந்த நிலையில்தான் மூன்று பேரும் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கோவில் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜூன் மற்றும் சரவணன் பட்டி காவல் ஆய்வாளர் ஞானசாய்சேகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மூன்று பேரையும் பிடிக்க சம்பவ இடத்தை சுற்றி வளைத்து இருக்கிறார்கள்.
அப்போது மூன்று பேரும் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக சந்திரசேகரன் என்ற தலைமைக்காவலரை இடது மணிக்கட்டில் வெட்டி விட்டு ஓடியுள்ளனர். இதனால் போலீசார் அவர்களை துரத்தி சென்றுள்ளனர். அப்போதும் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்காப்புக்காக மூன்று பேரையும் காலில் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.
ஏற்கனவே பல குற்ற வழக்குகள்
சதீஷ் என்ற கார்த்தி என்ற இரு கொடூரர்களுக்கு இரு காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவரின் ஒரு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. மூன்று பேரும் நேற்று இரவே கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த போலீசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் இடத்தை போலீசார் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இன்று காலையில் தடயவியல் துறையினர் உள்ளிட்டோர் ஆய்வு செய்ய உள்ளனர்.. பிடிபட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. பிடிப்பட்ட மூன்று பேரும் இன்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
-
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications