கோவைக்குப் போனால் 'தூ' வென்று துப்பாதீர்கள்.. ரூ. 100 நட்டமாயிடும்!
கோவை: கோவை நகரில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 100 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. நகரைச் சுத்தமாக வைத்திருக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேயர் பொறுப்பு வகிக்கும் லீலாவதி உன்னி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகரை தூய்மையாக, சுத்தமாக வைத்திருக்கத் தேவையான பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மூச்சா போனா ரூ. 100 அபராதம்.. துப்பினாலும் 100
அதன்படி பொது இடத்தில் குப்பை கொட்டுதல், சிறுநீர் கழித்தல், எச்சில் துப்புதல், மலம் கழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

நடு ரோட்டில் "கெள பாத்" எடுத்தால் ரூ. 500!
பறவைகளின் தீனி கழிவுகளை ரோட்டில் கொட்டினால் ரூ.100, மாடுகளை நடுரோட்டில் குளிப்பாட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

வாகனங்களைக் கழுவினால் ரூ. 500
மோட்டார் சைக்கிள்களை கழுவினால் ரூ.500, வேன், கார்களை கழுவினால் ரூ.500, கனரக வாகனங்களை கழுவினால் ரூ.1000.

பாத்திரம் பண்டங்களைக் கழுவினாலும் அபராதம்
சமையல் பாத்திரங்களை கழுவினால் ரூ.100, மருத்துவக் கழிவுகளை தரம் பிரிக்காமல் மாநகராட்சி குப்பைதொட்டியில் போட்டால் ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.

கூட்டம் போட்ட இடத்தை சுத்தம் செய்யாவிட்டால்
குப்பைகளை உருவாக்குவோருக்கு ரூ.10 ஆயிரம், கட்டுமான இடிப்புகளை தரம் பிரிக்காமல் ஒப்படைத்தால் ரூ.25 ஆயிரம், பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை 24 மணி நேரத்தில் சுத்தம் செய்யாவிட்டால் ரூ.25 ஆயிரம் என 24 இனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளLு.

திமுக எதிர்ப்பு
ஆனால் இந்த தீர்மானங்களுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் லதா, வருங்காலத்தில் கோவை சுகாதாரமான நகரமாக இருக்க வேண்டும் என்றால் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அவற்றை பின்பற்றினால் தான் மத்திய அரசிடமிருந்து உரிய நிதியை பெறமுடியும் என்று விளக்கினார். இருப்பினும் விளக்கத்தை திமுக ஏற்கவில்லை. கடைசியில் வெளிநடப்பு செய்தனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications