செம! கோவையில் காந்திபுரம் உட்பட 3 இடத்தில் வருகிறது சூப்பர் வசதி! இது நிஜமாகவே வேற லெவல்தான்
கோவை: இந்தியாவிலேயே வளரும் நகரங்கள் பட்டியலில் மிக முக்கிய இடத்தில் உள்ள கோவைக்கு அட்டகாசமான திட்டம் வர உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை அடுத்து மிகவும் முக்கியமான நகராகக் கோவை இருக்கிறது. இந்திய அளவிலும் கூட மிக வேகமாக வளரும் நகரங்களில் கோவை டாப் இடத்திலேயே இருக்கிறது.

இதனால் கோவை நகரில் மக்கள் தொகை எண்ணிக்கை மிக வேகமாகவே அதிகரித்து வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை தொழில்நகராக ஒரு பக்கம் வளர்க்கிறது என்றால்.. மற்றொரு புறம் அங்கே இருக்கும் ஐடி நிறுவனங்களும் கூட வேகமாக வளர்ந்தே வருகிறது. இதனால் கோவை பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் முதல் வந்தே பாரத் ரயிலும் கூட சென்னைக்கும் கோவைக்கும் இடையே தான் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்படி மிக முக்கியமான நகராக உள்ள கோவைக்கு புது திட்டங்கள் வர உள்ளது.
வேகமாக வளரும் கோவையில் வாகன பயன்பாடும் மின்னல் வேகத்தில் அதிகரித்தே வருகிறது. இந்தச் சூழலில் காந்திபுரம் பகுதியில் இரண்டு உட்பட நகரில் மூன்று இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை உருவாக்கக் கோவை கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. அதிகரிக்கும் கடைகள், போக்குவரத்து நெரிசல், போதியளவுக்கு வாகன நிறுத்துமிடங்கள் இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
கடந்த 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் போதே, கிராஸ் கட் சாலையில் லட்சுமி வளாகம் அருகே பல்டி லெவல் பார்கிங் அமைக்கப்படும் என அறிவித்தனர். இருப்பினும், பல்வேறு காரணங்களால் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. இந்நிலையில், காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா சாலையில் அமையும் செம்மொழி பூங்கா வளாகத்தில் இந்த மல்டி பார்கிங்கை அமைக்க அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் பூங்காவின் முதற்கட்ட பணிகளுக்காக 172.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பார்கிங் வசதி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் மல்டி லெவல் பார்ங்கிங் அமைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கிராஸ் கட் சாலையில் மல்டி லெவல் பார்ங்கிங் அமைக்கும் திட்டத்தைக் கைவிடலாம் என பல அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஒரே பகுதியில் இரண்டு பார்கிங் தேவையில்லை என்பது அவர்கள் வாதம். இருப்பினும், கோவை காப்ரேஷன் கமிஷனர் இரண்டையும் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்" என்றார்.
அதேநேரம் காந்திபுரம் பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால் இது தேவை என்பதே ஒரு தரப்பினரின் வாதமாக உள்ளது. மொத்தம் 40 கோடி செலவில் இந்த இரு மல்டி லெவல் பார்கிங் அமைய உள்ளது. ஒவ்வொரு பார்கிங்கிலும் தலா 250 என்று மொத்தம் 500 கார்களை இங்கே பார்க் செய்ய முடியும். இது அதிகரிக்கும் கோவை வாகன நெரிசல் மற்றும் பார்கிங் பிரச்சினைகளுக்குப் பெரிய தீர்வை தரும்.
இந்த 3 மல்டி லெவல் பார்கிங் மையங்களும் ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும். என்றும் இதன் மூலம் விரைவாக ஒருவரால் பார்கிங் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். செம்மொழிப் பூங்காவில் அமையும் மல்டி லெவல் பார்கிங் என்பது அருகே நேரு ஸ்டேடியத்தின் பார்க்கிங் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications