Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை சரவணம்பட்டியில் ரூ.3.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு அகற்றம் – மாநகராட்சி நிர்வாகம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அமைதியான ஊர் என்று பெயர் பெற்றாலும் அங்கு ஏராளமான பிரச்சனைகள் எழுந்து கொண்டிருக்கிறது. நூதன மோசடிகள், நிலம் தொடர்பான பஞ்சாயத்துகள் வெடித்து கொண்டிருக்கிறது. பரபரப்பான சரவணம்பட்டி பகுதியில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பூங்கா நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றி கம்பிவேலி அமைத்துள்ளனர்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமைக்கு சொந்தமான கோவை தொழில்துறை உற்பத்தியில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், ஐடி, தங்கநகை உற்பத்தி, குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் கோவையின் முதுகெலும்பாக உள்ளன. தொழில் வளர்ச்சி, இதமான தட்ப வெப்பம் ஆகியவற்றால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் அங்கு குடிபெயர்ந்து வருகிறார்கள்.

coimbatore-corporation-removed-3-crore-value-encroachment-in-saravanampatti

சரவணம்பட்டியில் ஆக்கிரமிப்பு

ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களும் ரியல் எஸ்டேட் துறையிலும் கோவை மிகப்பெரிய முன்னேற்றமடைந்துள்ளது. கோவை மாநகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கிறது. மாநகரின் மையப் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கோடியை தொட்டுவிட்டது. மாநகரின் எல்லை பகுதிகளிலும் நிலத்தின் மதிப்பு பல லட்சத்தை தொட்டுவிட்டது. அதை ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் மீனாட்சி நகர் என்கிற பகுதி உள்ளது. அங்கு கடந்த 1993 ஆம் ஆண்டு மனைப்பிரிவு வடிவடைக்கப்பட்டது. நகர ஊரமைப்பு விதிகள்படி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக (ரிசர்வ் சைட்) ஒதுக்கப்பட்டது. இதற்கான தானப்பத்திரம் சரவணம்பட்டி பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதிரடி உத்தரவு

கடந்த 2011 ஆம் ஆண்டு சரவணம்பட்டி பேரூராட்சி கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தை சிவஞானம் என்கிற தொழிலதிபர் ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் கட்டியதாக புகார் எழுந்தது. அதனுடன் வழித்தடம் ஆகியவற்றையும் அவர் ஆக்கிரமித்ததாக கூறப்பட்டது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.3.5 கோடியாகும்.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுக்கப்பட்டது. அதனப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர், சிவஞானத்திற்கு ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதனை எதிர்த்து சிவஞானம் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

அதை விசாரித்த நீதிமன்றம் கடந்த 19.12.202 வழக்கை தள்ளுபடி செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் படி மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி நகரமைப்பு அலுவலர் சத்தியா, உதவி பொறியாளர் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அந்த ஆக்கிரமிப்பை அகற்ற சென்றார்கள்.

காவல்துறையினர் பாதுகாப்புடன், 3 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சுற்றுசுவர் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. கம்பி வேலி அமைத்து, அது மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் என்று எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+