கோவை ‘Red Zone'.. டிரோன்கள் பறக்க தடை.. குண்டுவெடிப்பு நாள் மற்றும் சிவராத்திரி காரணமாக அதிரடி ஆணை!
கோவை: கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் நாளை (பிப்ரவரி 13) முதல் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை குண்டுவெடிப்பு நாள் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் வருகையால் கோவையின் முக்கிய பகுதிகளை ரெட் சோன் ஆக அறிவித்து மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர் 2,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பு தினத்தை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், வரும் 15 ஆம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த விழா, மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. ஈஷாவில் இந்த ஆண்டு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ளனர்.
கோவை குண்டுவெடிப்பு நாள் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள் வருகையால் சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், நேரு நகர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், வீரகேரளம், வடவள்ளி உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் RED ZONEஆக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் நாளை பிப்ரவரி 13 நள்ளிரவு முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி நள்ளிரவு வரை சுமார் 48 மணி நேரம் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications