கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவையில் உள்ள வீட்டில் டிஐஜி விஜயகுமார் தமது கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

2009-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று காவல்துறையில் இணைந்தார் விஜயகுமார்.
காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி., திருவாரூரில் மாவட்ட எஸ்.பி. யாக பணியாற்றியவர் டிஐஜி விஜயகுமார். பின்னர் சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக பணியாற்றிய நிலையில் கோவை டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். கோவை டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார் விஜயகுமார்.
இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலை முகாம் அலுவலகத்தில் இன்று டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது டிஐஜி விஜயகுமார் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. டிஐஜி வியகுமார் தற்கொலை தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: டிஐஜி விஜயகுமாற் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில்… pic.twitter.com/TryrsY3FSK
— M.K.Stalin (@mkstalin) July 7, 2023
அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக திறம்பட பணியாற்றி வந்த திரு.விஜயகுமார் ஐ.பி.எஸ் அவர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து துயருற்றேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகிய பணிகளில் துடிப்புடன் செயல்பட்ட விஜயகுமார் அவர்களின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.












Click it and Unblock the Notifications