கோவை மக்களுக்கு சூப்பர் நியூஸ்.. பள்ளிகளுக்கு விடுமுறை, போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க
கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (பிப்ரவரி 10ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி, திங்கள் கிழமை நடைபெறுகிறது. கடந்த 3-ஆம் தேதியன்று குடழுக்கு விழா நிகழ்வுகள், சிறப்பு பூஜையுடன் துவங்கின. பிப்ரவரி 7- ஆம் தேதி காலை முதல் முதற்கால யாகபூஜைகள் துவங்கி நடந்து வருகின்றன. இதற்காக 60 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குடமுழுக்கை முன்னிட்டு பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நாளை கோவை பேரூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை (பிப்ரவரி 10) காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் நடைபெற உள்ளது. பேரூர் சாலையில் நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
பேரூருக்கு மேற்கே தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மாதம்பட்டி, செம்மேடு, பூண்டி, காருண்யா நகர் ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் பேரூர் செட்டிபாளையம் அருகே கோவைபுதூர் மெயின் ரோடு வழியாக திருப்பி விடப்படும்.
காந்திபுரம், ரயில் நிலையம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி பேரூர் மெயின் ரோட்டின் வழியே வரும் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் செல்வபுரம் சிவாலயா பஸ் ஸ்டாப் அருகே புட்டுவிக்கி வழியாக சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு வழியாக திருப்பி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications