செந்தில் பாலாஜியால் வெடித்த மோதல்.. கரூர் ஆட்களால் கோவை திமுகவினர் அப்செட்.. ஹேப்பியாகும் அதிமுக
கோவை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் ஆட்களுக்கும், கோவை திமுகவினர் இடையே மோதல் அதிகரித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெடித்துள்ள இந்த மோதலால் செந்தில் பாலாஜிக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. எப்படியாவது தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. மேலும் மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடுகளையும், அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். எந்த தொகுதியிலும் உள்கட்சி பூசல் கூடாது என்று ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். இதற்கிடையே தான் கோவை திமுகவில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிக இடங்களை வென்றது.திமுக பின்தங்கியது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2021 சட்டசபை தேர்தலில் 9 இடங்களில் அதிமுகவினரும், கோவை தெற்கில் பாஜகவின் வானதி சீனிவாசனும் வெற்றி பெற்றனர். ஒரு இடத்தில் கூட பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவில்லை.
இதனால் கொங்கு மண்டலத்தில் இந்த முறை திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது. கொங்கு மண்டல பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். செந்தில் பாலாஜியை எடுத்து கொண்டால் கள எதார்த்தத்தை அறிந்து வாக்குகளை மொத்தமாக அள்ளும் வகையில் களப்பணி செய்யக்கூடியவர்.
இதனால் தான் முதல்வர் ஸ்டாலின் அவரை கொங்கு பொறுப்பாளராக நியமித்துள்ளார். செந்தில் பாலாஜியின் களப்பணிக்கு 2022ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலே சாட்சி. கோவை மாநாகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதேபோல் பிற கொங்கு பகுதிகளில் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக ஆதிக்கம் செலுத்தியது.
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் செந்தில் பாலாஜி தலைமையில் கோவையில் திமுகவினர் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளனர். இரவு, பகல் பாராமல் திமுகவினர் பம்பரமாக சுழல்கின்றனர்.
கோவையில் பிப்ரவரி 22, பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில் 2 மாநாடுகளை நடத்த செந்தில் பாலாஜி முடிவெடுத்துள்ளார். இதற்கிடையே தான் திமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் என்பது கோவை திமுகவினருக்கும், செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனி ஆட்களுக்கும் இடையே வெடித்துள்ளது.
கடந்த 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது செந்தில் பாலாஜியின் கரூர் ஆதரவாளர்கள் தான் கோவையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. தற்போது செந்தில் பாலாஜி அதே பார்மூலாவை சட்டசபை தேர்தலுக்கும் கொண்டு வந்துள்ளார். செந்தில் பாலாஜி கரூரில் இருந்து கோவைக்கு ஆட்களை இறக்கிவிட்டுள்ளார். இவர்கள் மேற்பார்வை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில் கோவை திமுகவினருக்கு செந்தில் பாலாஜி வேறு பணியை வழங்கி உள்ளார். செந்தில் பாலாஜி உத்தரவுப்படி கோவை திமுகவினர் பூத் வாரியாக டேட்டாக்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் வீடு வீடாக சென்று ஒரு பூத்துக்கு உட்பட்ட பகுதியில் எத்தனை ஆண், பெண் வாக்காளர்கள் உள்ளனர்கள்? மொத்த குடும்பம் எத்தனை? ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேர் உள்ளனர்? ரேஷன் கார்டு எண், மகளிர் உரிமைத்தொகை வாங்குகிறார்களா? மாற்றுத்திறனாளிகளாக யாரும் இருக்கிறார்களா? என்ற விவரங்களை சேகரித்து கரூர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களிடம் வழங்குகின்றனர்.
ஆனால் அதனை செந்தில் பாலாஜியின் கரூர் ஆதரவாளர்கள் ஏற்பது இல்லையாம். சேகரிக்கப்பட்ட டேட்டாவை நிராகரிப்பதோடு, கடினமான வார்த்தைகளால் திட்டவும் செய்கின்றனராம். இதனால் செந்தில் பாலாஜியின் கரூர் ஆதரவாளர்களுக்கும், கோவை திமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
குறிப்பாக கோவை திமுகவினர் கடும் மனஉளைச்சலில் உள்ளனர். கோவை எங்களின் சொந்த மாவட்டம். இந்த மாவட்டத்துக்கு வெளியாட்களை இறக்கியது மற்றும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்தது உள்ளிட்டவற்றால் கோவை திமுகவினர் கலக்கமடைந்துள்ளனர். மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அதிமுகவினர் ஹேப்பியாகி உள்ளனர்.
இந்த மேட்டர் செந்தில் பாலாஜியின் காதுக்கும் சென்றுள்ளது. இதனால் தேர்தல் வரும் நேரத்தில் உட்கட்சி மோதல் கூடாது. அப்படி நடந்தால் அது திமுகவை பலவீனப்படுத்தி விடும் என்பதை நன்கு உணர்ந்துள்ள செந்தில் பாலாஜி அதிருப்தியில் உள்ள கோவை திமுகவினரை சமாதானப்படுத்தும் பணியையும் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications