கோயம்புத்தூரில் அம்மி மிதித்த மணப்பெண்ணை "ஆ"ன்னு பார்த்த நெதர்லாந்து இளைஞர்.. வியப்புடன் நின்ற கோவை
கோவை: கோவையில் நடந்த திருமணம் ஒன்று, இணையத்தில் அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.. 5 ஆண்டுகளாக காதலித்து நெதர்லாந்து நாட்டு இளைஞரை கரம் பிடித்துள்ளார் கோவை பெண்.. இதையடுத்து, மணமக்களுக்கு பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களையும் சொல்லி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ளது சாமநாயக்கன்பாளையம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பிரேமலதா.. இவர் நெதர்லாந்து நாட்டிலுள்ள நிஜ்வேர்டால் என்ற பகுதியில் சிடிஎஸ்ஐடி நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டராக பணியாற்றி வந்துள்ளார். அப்போதுதான், ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்ற இளைஞரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

காதலர்கள்: நெதர்லாந்து நாட்டில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார் ரமோன்.. இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் காதலாக மாறியது.. இவர்களது தீவிரமான காதல் 5 ஆண்டுகளாக நீடித்தது. இறுதியில் திருமணம் செய்து கொள்வதென முடிவெடுத்தனர். இதற்காக தங்களது விருப்பத்தை, தங்கள் இரு குடும்பத்தினரிடமும் சொன்னார்கள்.. இறுதியில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவானது.
கோவை இடிகரை அருகே தனியார் திருமண மண்டபத்தில், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சூழ இந்த திருமணம் தற்போது நடந்துள்ளது. அதிலும் நம்முடைய தமிழர் பாரம்பரிய முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. முறைப்படி அக்னி சாட்சியாக அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, இந்த திருமணம் நடந்துள்ளது.
நண்பர்கள்: மாப்பிள்ளை வீட்டு சார்பாக, நெதர்லாந்து நாட்டிலிருந்து மாப்பிள்ளையின் பெற்றோர்கள் மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் என பலரும் வந்திருந்தனர்.. இதில் ஆச்சரியம் என்னவென்றால், மாப்பிள்ளை பட்டுவேட்டி அங்கவஸ்திரத்துடன் ஜொலி ஜொலித்ததுடன், மாப்பிள்ளை வீட்டினரும், தமிழரின் பாரம்பரிய வேட்டி, பட்டு சேலைகளை அணிந்தவாறு திருமணத்தில் பங்கேற்றனர்.
நெதர்லாந்து பெற்றோர் பட்டுவேட்டி, சட்டையுடன் நின்று, பெண்ணுக்கு தாலி எடுத்து தந்தனர்.. அவர்களுக்கு பாதபூஜையும் செய்யப்பட்டது. தட்டில் பாதங்களை வைத்து, தங்களது மகன் செய்த இந்த விசேஷ சடங்கினை ஆச்சரியத்துடன் பார்த்தனர்..
மஞ்சள் தாலி: தாலி கட்டி முடித்ததுமே, மணமேடையில் மணக்களுடன் சேர்ந்து, பெண்ணுக்கு தாலி எடுத்து தரும்போது, இரு கைகளையும் கூப்பி நெதர்லாந்து குடும்பத்தினர் அனைவருமே வணக்கம் சொன்னார்கள். மணமகளின் தோளை பிடித்து கொண்டு, அருந்ததி நட்சத்திரம் காட்டினார் நெதர்லாந்து மணமகன்..
மணமக்கள் இருவரும் தங்களது பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.. மலர் வாழ்த்துதல், மாலை மாத்துதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இதையெல்லாம் மாப்பிள்ளையும், அவரது குடும்பத்துடனும் ஆர்வமுடன் பார்த்து கொண்டே ரசித்தார்கள்.. இவர்கள் ரசிப்பதை கோவை சுற்றுவட்டார பகுதியே நேரில் வந்து ரசித்து கொண்டிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, அதை நெட்டிசன்களே ரசித்து கொண்டிருக்கிறார்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications