பாதிக்கப்பட்ட மாணவி எப்படி இருக்கிறார்? அதிகாலை 4 மணிக்கு தாமதமாக மீட்டது ஏன்? கமிஷனர் விளக்கம்
கோவை: கோவையில் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, தற்போது நலமாக இருக்கிறார் என்று மாநகர காவல் துறை ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாணவியை மீட்பதில் ஏன் தாமதம் என்பது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை மது போதையில் அந்த வழியாக வந்த கார்த்தி என்கிற காளீஸ்வரன், சதீஷ் என்கிற கருப்பசாமி, குணா என்கிற தவசி ஆகியோர் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை தூக்கிக் கொண்டு போய் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

அந்த மூவரையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 3 பேரும் போலீஸாரால் துப்பாக்கியால் காலில் சுடப்பட்டு பிடிக்கப்பட்டனர். மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கோவையில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரும் துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் மறைந்திருப்பதை அறிந்து அங்கு போலீஸார் சுற்றி வளைத்தனர்.
அப்போது இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை அவர்கள் மூவரும் அரிவாளால் வெட்டினர். இதையடுத்து குறைந்தபட்ச படையை கொண்டு போலீஸார் தற்காப்புக்காக அவர்களை காலில் சுட்டு பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மூவரும் கார்த்தி என்கிற காளீஸ்வரன், சதீஷ் என்கிற கருப்பசாமி, குணா என்கிற தவசி என தெரியவந்தது. இதில் கார்த்தி, கருப்பசாமி இருவரும் சிவகங்கையை சேர்ந்தவர்கள். 15 ஆண்டுகளாக கோவையில் தங்கி இருக்கிறார்கள்.
தவசி என்கிற குணா, மதுரை மாவட்டம் கருப்பாவூரணி பகுதியைச் சேர்ந்தவர். இவரும் 10, 20 ஆண்டுகளாக கோவையில் இருந்து வருகிறார். குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் மீதும் 4 அல்லது 5 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
கிணற்றுக்கடவு பகுதியில் நடந்த கொலை வழக்கு இவர்கள் மீது நிலுவையில் உள்ளது. கே.சி.சாவடியில் அடிதடி வழக்கு, துடியலூர் பீளமேட்டில் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. சத்தியமங்கலத்தில் திருட்டு வழக்கில் கைதான மூவரும் கைது செய்யப்பட்டு 30 நாட்களாக வெளியே ஜாமீனில் இருக்கிறார்கள்.
அவர்கள் மூவரும் இருகூரில் வசித்து வருகிறார்கள். இருகூரில் வீட்டில் மது அருந்திவிட்டு மது பாட்டிலை வாங்கிக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் இருந்த காரின் கண்ணாடியை கல்லால் உடைத்து , அந்த ஆண் நண்பரை அரிவாளால் தாக்கினர்.
பின்னர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். மூவரும் திருமணமாகாதவர்கள். இவர்களில் சதீஷ் என்கிற கருப்பசாமிக்கு வயது 30, குணா என்கிற தவசிக்கு வயது 20, கார்த்தி என்கிற காளீஸ்வரனுக்கு வயது 21. இவர்களில் காளீஸ்வரனும் கருப்பசாமியும் அண்ணன் தம்பிகள். இவர்களது தூரத்து சொந்தம் குணா!
இந்த சம்பவம் யதார்த்தமாக நடந்தது போல்தான் தெரிகிறது. திட்டமிட்டு நடந்தது போல் இப்போதைக்கு தெரியவில்லை. வழக்கு விசாரணையில்தான் தெரியவரும். கோயில்பாளையத்தில் ஒரு வீட்டில் சாவி போடப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டுதான் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இந்த வாகனம் திருட்டு குறித்து கோயில்பாளையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 300 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் இவர்கள்தான் குற்றவாளி என அடையாளம் கண்டோம். கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படத்தை எந்த ஊடகங்களிலும் வெளியிட வேண்டாம்.
குற்றவாளி கண்டுபிடிக்கும் அணிவகுப்பு நடத்த வேண்டும். அதில் பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டுவார். அதுவரை அவர்களது புகைப்படங்களை வெளியிட வேண்டாம். யதேச்சையாக சம்பவ இடத்திற்கு மூவரும் வந்த போது ஒரு கார் நிற்பதை பார்த்துவிட்டு இவர்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர்.
296டி, 118, 324, 140, 309, 18 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நலமாக இருக்கிறார். அவருக்கு pshychiatric counselling கொடுக்கப்பட்டு வருகிறது. காளிஸ்வரனும் கருப்புசாமியும் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வருகிறார்கள். அவர்கள் கோர்ட்டுக்கு போன வருகை பதிவு இருக்கிறது.
இவர்கள் மரம் வெட்டும் வேலை, லேக் பணி என கிடைக்கும் வேலைகளை செய்து வந்தனர். நிரந்தரமாக குறிப்பிட்டு சொல்லும் படியாக இவர்கள் பணியாற்றவில்லை. இரவு 10.45- 11 மணிக்கு இந்த என்கவுன்டர் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு பிருந்தாவன் நகர் மெயின் ரோடு வரை போலீஸ் பேட்ரோல் வாகனம் சென்றுள்ளது. அதன் பிறகுதான் இந்த சம்பவம் 10.40 மணிக்கு நடந்தது. எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த ஆதாரங்களையும் சிசிடிவி காட்சியில் கிடைத்த ஆதாரங்களையும் ஒப்பிடும் போது இந்த மூவர்தான் என தெரிகிறது.
கூலிப்படையினருடன் இவர்களுக்கு தொடர்பிருக்கிறதா என்பதெல்லாம் இப்போதைக்கு தெரியவில்லை. அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் போதுதான் தெரியும். அந்த இடத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மதுபான பார் இருந்தது. ஒரு பிரச்சினையால் அந்த பார் மூடப்பட்டுவிட்டது என்றார்.
சம்பவம் நடந்தது 11 மணி, அந்த பெண்ணை அதிகாலை 4 மணிக்குத்தான் காவல் துறை மீட்டது என செய்தியாளர் கேள்விக்கு சரவண சுந்தர் கூறுகையில், பிரச்சினை என்னவென்றால் இந்த சம்பவம் நடந்தது இரவு 10.40 மணிக்கு! அந்த ஆண் நண்பர் 11.20 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். முதலில் சென்னைக்கு போன் போகும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் வந்து 11.35 மணிக்கெல்லாம் சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்றனர்.
அந்த மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் ஒரு சிறியதாக சுவர் இருந்தது. இருட்டாக இருந்ததால் அது போலீஸாரின் பார்வைக்கு தெரியவில்லை. சுற்றியிருந்த கல்லூரிகளின் பின்புறத்தில் எல்லாம் தேடினர். ஆனால் அந்த மாணவி இருந்த இடம் மிகவும் மறைவான இடம். பின்னர் அந்த பெண் வெளியே வந்ததும் அங்கு அவரை போலீஸார் மீட்டு கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
அந்த காலி இடம் யாருடையது என்பது குறித்து வருவாய் துறையினரிடம் கேட்டு வருகிறோம். விமான நிலைய விரிவாக்கம் பணிக்கு அளவிடும் பணிகள் நடந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் தெளிவான விவரங்களுக்கு வருவாய் துறையினரிடம் தகவல்களை கேட்டுள்ளோம். அந்த பெண்ணை மறைவான இடத்திற்கு நடக்க வைத்தே அழைத்துச் சென்றார்கள்.
காவல் துறை சார்பில் ஒரு செயலி இருக்கிறது. நாம் போன் கூட செய்யத் தேவையில்லை. மூன்று முறை போனை ஷேக் செய்தாலே எஸ்ஓஎஸ் கால் காவல் நிலையத்திற்கு சென்றுவிடும். 100-க்கு கூட போன் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. போனை ஷேக் செய்தாலே போதும். இவ்வாறு கமிஷனர் தெரிவித்துள்ளார்.
-
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம் -
இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங் -
கோவையில் 2 ஆயிரம் அரசு ஊழியர்கள் எடுத்த முடிவு.. மாவட்ட கலெக்டருக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications