அவிநாசி ரோடு மேம்பாலத்தை விடுங்க! மேட்டுப்பாளையம் வரை செம மாற்றம்.. ஊட்டி போக இனி பிரச்சனை இருக்காது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை இருக்கும் சாலையை நான்கு வழிச்சாலையாகத் தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கியமான மாவட்டமாகக் கோவை இருக்கிறது. கோவையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தத் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

coimbatore avinashi

அதன்படி அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும் எனச் சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறை துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

சாலை விரிவாக்கம்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து அன்னூர் வழியாகக் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் வரை செல்லும் இந்த 35 கிமீ சாலையானது முதல்வரின் ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. 250 கோடி ரூபாய் செலவில் இந்த ரோடு நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது.. நீலகிரி செல்லும் வாகனங்கள் இப்போது கோவைக்குள் வந்து செல்ல வேண்டி இருக்கிறது. இந்த நான்கு வழிச்சாலை மூலம் அது தவிர்க்கப்படும்.

சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை நெடுஞ்சாலைத் துறை இப்போது தயாரித்து வருவதாகவும் எ வ வேலு தெரிவித்தார். மேலும், சிங்காநல்லூர் மேம்பாலத்துக்கு மறு டெண்டர் விடப்படும் என்றும் அவர் கூறினார்.

புறவழிச்சாலை: தமிழ்நாடு அரசு கோவையில் இருந்து சத்தியமங்கலம் வரை புறவழிச்சாலை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் இது கிடப்பில் போடப்பட்டது. இப்போது இந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ள நிலையில், அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தங்கள் நிலங்களைச் சாலை விரிவாக்கத்திற்குத் தர முடியாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாகவும் அமைச்சர் எ வ வேலு விளக்கமளித்தார். அதாவது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போராடும் விவசாயிகளைச் சந்தித்து புறவழிச்சாலையின் நன்மைகளை விளக்குவார்கள் என்று தெரிவித்தார். இந்த புறவழிச்சாலைக்கு ஏற்கனவே முதல் கட்டமாக 12 கிமீ தூரத்திற்கு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர், இரண்டாம் கட்ட கட்டுமானத்திலும் 95% நிலம் கையகப்படுத்துதல் முடிந்துள்ளதாகவும் எ. வ. வேலு குறிப்பிட்டார்.. அதேபோல அவிநாசி சாலை மேம்பாலம் பணிகள் 2025 ஜனவரிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவை சாலைகள்: கோவை மாவட்டத்தில் சாலைகள் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுவது குறித்தும் அமைச்சர் எ வ வேலு விளக்கமளித்தார். கோவை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 997 கோடி செலவில் 664 கிமீ சாலைப் பணிகள் மேம்பாடு மற்றும் அகலப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 652 கிமீ தொலைவுக்கு பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. மீதமுள்ள 12 கிமீ-க்கு மட்டுமே மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல நடப்பு நிதியாண்டிலும் 142 கிமீ தொலைவுக்கு டெண்டர் கோரப்பட்டு, ரூ. 332 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+