விடுங்க.. உங்களுக்கு புரியல.. எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது.. கோவை மாணவியின் கலங்கடிக்கும் கடைசி ஆடியோ
கோவை பள்ளி மாணவி ஆசிரியருடன் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது
கோவை: "எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது அதையெல்லாம் நினைச்சாலே.. விடுங்க, எனக்கு எப்படி இருக்கும் என்று உங்களுக்கு புரியவில்லை" என்று தற்கொலை செய்து கொண்ட மாணவி, ஆசிரியர் மிதுனிடம் கண்ணீர் விட்டு புலம்பும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கலங்கடித்து வருகிறது. இந்த ஆடியோவின் உண்மைதன்மை என்ன என்பதை போலீசார் கண்டறிந்து வருகிறார்கள்.
கோவை மாணவி தற்கொலை விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆவேசத்தில் உள்ளது.
3 நாட்களாக பரபரப்பின் பிடியில் கோவை சிக்கி வருகிறது.. ஆர்எஸ்புரம் சின்மயா பள்ளியின் 17 வயது மாணவியின் தற்கொலைக்கு காரணம், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி தந்த பாலியல் தொல்லைதான் என்பது வெட்ட வெளிச்சமாகி வருகிறது..

மனஉளைச்சல்
6 மாதமாக மனஉளைச்சலில் மாணவி தவித்து வந்ததாக சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.. ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களை எல்லாம் சும்மா விடாதீர்கள் என்று எழுதப்பட்ட மாணவியின் கடைசி கடிதமும், அதில் உள்ள பெயர்களும் வலுவான சாட்சியாக அமைந்துவிட்டது.. மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாட்ஸ்அப்
இதனிடையே, மாணவிக்கும் மற்றும் ஆசிரியர் மிதுனுக்கும் இடையே நடந்த வாட்ஸ் அப் சாட் ஸ்க்ரீன் ஷாட்கள் நேற்று முன்தினம் கசிந்தன.. மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி "பேசி பேசியே பாலியல் வரை பேச்சை வளர்ப்பீர்கள் என்று எனக்கு தெரியாது. ஆசிரியர் என்பதால் முழுமையாக விலக முடியவில்லை... அதற்காக நான் எல்லாவற்றுக்கும் சம்மதிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இப்போதுகூட உங்களுக்கு இது தவறாகத் தெரியவில்லை. அதனால்தான் என்மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.. இதுதான் எனக்கு கோபமாக இருக்கிறது..

மிதுன் சக்ரவர்த்தி
சார்... ஏன் அப்படி பண்ணீங்க? இப்ப கூட உறுத்தலையா? என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. இயற்பியல் வகுப்பை கவனிக்கவும் முடியவில்லை. இந்தப் பள்ளியைவிட்டே செல்லுங்கள்" என்று மாணவி அதில் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென, மாணவி மிதுனிடம் பேசும் ஆடியோ ஒன்றும் லீக் ஆகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பி விட்டு வருகிறது..

பள்ளி நிர்வாகம்
தற்கொலை செய்து கொண்ட மாணவி மிதுனிடம், "மேலும் 2 மாணவிகளிடமும் நீங்க இதே மாதிரி பேசியதாக மாணவிகள் சொல்கிறார்கள்" என்கிறார்.. அதற்கு மிதுன் மறுப்பு தெரிவிக்கிறார்.. "சத்தியமாக நான் அவங்களிடம் அப்படி பேசவில்லை" என்கிறார்.. பிறகு மாணவி, "எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது அதையெல்லாம் நினைச்சாலே.. இதை பற்றி நான் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல போறேன்" என்கிறார்.

ஆடியோ
அதற்கு மிதுன், "இது ஒரு விபத்து.. நானும் தூங்கி ரொம்ப நாள் ஆகிடுச்சு தெரியுமா" என்கிறார்... உடனே மாணவி "விடுங்க, எனக்கு எப்படி இருக்கும் என்று உங்களுக்கு புரியவில்லை" என்று போனை துண்டிக்கிறார்.. இந்த ஆடியோவில் மேலும் சில உரையாடல்களும் இருவருக்கும் நடந்துள்ளது.. அதில் தன்னை குற்றமற்றவர் போல காட்டிக் கொள்ள மிதுன் ஏதேதோ சொல்கிறார்.. முதலில் கடிதம், அடுத்து வாட்ஸ்அப் சேட், அடுத்து போன் ஆடியோ என ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.. இவைகளின் உண்மை தன்மை என்ன என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
Recommended Video

டியூஷன் டீச்சர்
அதேபோல, சாகும் முன்பு, மாணவி தான் எழுதிய கடிதத்தில் மேலும் 2 பேரின் விவரங்களை மாணவி குறிப்பிட்டிருந்தார். ரித்தாவோட தாத்தா, எலிசா சாருவோட அப்பா என்று எழுதியிருந்தார்... இவர்கள் மாணவி, 3ம் வகுப்பு படித்த போது டார்ச்சர் செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.. ஆனால், அதற்கு பிறகு அவர்கள் மாணவியை சந்திக்கவில்லை என்கிறார்கள்.. எனினும், இந்த விவகாரத்தில் மாணவி குறிப்பிட்ட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications