விர்னு ஏறிய "கிடா".. பொள்ளாச்சியை அண்ணாந்து பார்த்த கோயம்புத்தூர்.. பலே, கோவையில் களைகட்டிய பக்ரீத்

Subscribe to Oneindia Tamil

கோவை: பக்ரீத் பண்டிகை நெருங்கிவருவதால் கால்நடை சந்தைகள் படுபிஸியாகியிருக்கின்றன.. அந்தவகையில் கோவை , பொள்ளாச்சி மார்க்கெட்டும் களைகட்டின.
தமிழகத்தை பொறுத்தவரை கால்நடை சந்தைகள் எப்போதுமே பிரசித்தி பெற்றவை.. இதுமாதிரியான கால்நடை சந்தைகள்தான், கிராமப்புற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக கைகொடுத்து உதவிகொண்டிருக்கிறது.

Kovai Goat sale Qurbani Kallakurichi Coimbatore Goat Market

அந்தவகையில், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச்சந்தை, நெல்லை மேலப்பாளையம் சந்தை, வேலூர் கேவி குப்பம் சந்தை போன்றவைகளில் ஆடுகளை வாங்குவதற்காகவே பொதுமக்கள் இந்த சந்தைகளுக்கு திரண்டுவருவார்கள்..

கால்நடை சந்தைகள்: அதிலும், பண்டிகை காலத்தில் கூடும் கால்நடை சந்தைகளில், விற்பனைகள் அதிகமாவது இயல்பான விஷயமாகும்.. இதுபோன்ற விசேஷ நாட்களில், செம்மறி ஆடு, வெள்ளாடுகள் சந்தைக்கு கொண்டு வந்தாலும், வெள்ளாடுகளுக்குதான் அதிக கிராக்கி இருந்து வருகிறது.. வெள்ளாடுகளின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும்..

வருகிற ஜூன் 16 மற்றும் 17ம் தேதிகளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், தமிழகத்திலுள்ள கால்நடை சந்தைகள் படுபிஸியாகிவிட்டன. குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வருகிறார்கள்.

பொள்ளாச்சி: அந்தவகையில், புகழ்பெற்ற பொள்ளாச்சி சந்தையும் களைகட்டியது.. பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே ஒரு பகுதியில் வாரந்தோறும் ஆடு விற்பனை நடைபெறுகிறது.

இங்கு பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடாக்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்வது வழக்கமாகும்.

ஆனால், கடந்த சில வாரமாக சந்தைக்கு ஆடுகள் வரத்து ஓரளவே இருந்து வந்த நிலையில், தற்போது, விறுவிறுவென விற்பனை நடந்தது. நேற்று அதிகாலை முதலே வியாபாரிகள் அதிகளவு ஆடுகளை கொண்டு வந்தனர்.

ஆடுகள் விற்பனை: அதன்படி நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.. தமிழகம் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதில் எடை அதிகமாக உள்ள கிடாவுக்கு கிராக்கி நிறையவே இருந்தது.. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது.

ஆனால் தற்போது பக்ரீத் நெருங்கிவிட்டதால், 28 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ரூ.26 ஆயிரம் வரையிலும், சுமார் 40 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான கிடா கொண்ட பெரிய அளவிலான கிடா ரூ.37 ஆயிரம் வரையிலும் என எப்போதும் இல்லாத வகையில் கூடுதல் விலை போனது. மொத்தத்தில் பொள்ளாச்சி சந்தையில் ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.1.25 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+