இதற்கு முன் இப்படி இருந்ததே இல்லை.. ஐடி முதல் ஆறு வரை.. கோவைக்கு அள்ளிக்கொடுத்த "தங்கத்தின்" பட்ஜெட்
கோவை: 2024 தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவை மாவட்டத்திற்கு என்று ஏகப்பட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 10000 கோடிக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
திட்டம் 1: மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஒரே நேரத்தில் முக்கியமான நல்ல செய்தியை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் வெளியிட்டு உள்ளார்.

திட்டம் 2: மதுரை, கோயம்புத்தூருக்கு அமைக்கப்பட உள்ள முழுமையான டிபிஆர் ரிப்போர்ட் அளிக்கப்பட்ட பின்பும் அங்கே பணிகளை தொடங்க மத்திய அரசு இன்னும் அனுமதிக்கவில்லை என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்படும். சென்னை மெட்ரோ 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பணத்தில்தான் கடன் வாங்கி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பட்ஜெட்டில் கோவை, மதுரைக்கு மெட்ரோ அமைக்க மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அனுமதி அளித்ததும் மாநில அரசின் நிதியும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு அனுமதி இல்லாத காரணத்தால் இந்த இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. சென்னை மெட்ரோவிற்கு நிதியை மத்திய அரசு கொடுத்தால் கோவை, மதுரை மெட்ரோ மீது அரசு கவனம் செலுத்த முடியும்.
கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும்.
அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திட்டம் 3: நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில், தகவல் தொழில்நுட்பம் வாழ்வியல் அறிவியல் விண்வெளி பொறியியல் துறைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற உயர் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கான தேவை அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடியில் இரண்டு கட்டங்களாக 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன வசதியுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா கோவை விளாங்குறிச்சியில் அமைக்கப்படும் .
திட்டம் 4: ஐடி பூங்கா தவிர்த்து கோவையில் தனியாக இன்னொரு தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
திட்டம் 5: மதுரையில் அமைக்கப்பட்டது போலவே பிரம்மாண்டமாக கோவையில் விரைவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.
திட்டம் 6: கோவைக்கு என்று சிறப்பாக கைத்தறி சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்பது உட்பட மொத்தமாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 10000 கோடிக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications