கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசத்தும் கோவை அரசு மருத்துவமனை.. சமூக விலகலை நடைமுறைப்படுத்த சூப்பர் ஸ்டிக்கர்

Google Oneindia Tamil News

கோவை: கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே, கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தரையில் வித்தியாசமான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

Recommended Video

    POSITIVE STORY அடடே...! மருத்துவமனை தரைகளில் ஒட்டப்பட்ட சமூக விலகல் ஸ்டிக்கர்ஸ்!

    கொரோனா நோய் தொற்று, காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் சமூக இடைவெளியை பராமரிப்பதில், சிக்கல் நிலவி வருகிறது.

    Coimbatore government hospital stickers getting good response

    குறிப்பாக, டிக்கெட் வழங்குமிடம், புறநோயாளிகள் வார்டுகளில் நோயாளிகளின் உறவினர்கள் ஒன்று கூடுதல் போன்றவற்றால், சமூக விலகலை கடைபிடிப்பது இயலவில்லை.

    சென்னையில் முழு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் எப்படி?.. 4.30 மணிக்கு விளக்குகிறார் காவல் துறை ஆணையர்சென்னையில் முழு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் எப்படி?.. 4.30 மணிக்கு விளக்குகிறார் காவல் துறை ஆணையர்

    எனவே, தொற்று வேகமாக பரவும் சூழல் நிலவுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளன. கால் படம் பொறித்து வித்தியாசமாக உள்ளன இந்த ஸ்டிக்கர்கள்.

    Coimbatore government hospital stickers getting good response

    அடிக்கடி கை கழுவவேண்டும் என்பது உள்ளிட்டவை அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள், மருத்துவமனைக்கு வரும் நபர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது போன்ற வாசகங்கள் ஆகியவை அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள், பல்வேறு பகுதிகளில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளன.

    English summary
    Amidst the spread of coronavirus, the Government Hospital in Coimbatore has pasted a different stickers on the floor for patients to observe social distence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X