பேமிலி கூட ஓட்டு போடலைன்னு கலாய்க்கிறாங்க..தவறான தகவலால் .. வேட்பாளர் கார்த்திக் மனஉளைச்சல்
கோவை: கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் போட்டியிட்ட கார்த்திக் ஒரே ஒரு வாக்கை மட்டும் பெற்று படுதோல்வி அடைந்தார். பாஜகவைச் சேர்ந்த இவர் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது
இதில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும் 22581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் அறிவிக்கப்பட்டது.

5 பதவியிடங்கள்
இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 2874 பதவியிடங்களும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களில் 119 பதவியிடங்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களில் 5 பதவியிடங்களும் போட்டியின்றி நிரப்பப்பட்டன.

முடிவுகள் அறிவிப்பு
மேலும், ஒரு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடம் நீதிமன்ற வழக்கின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கும் 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கும் போட்டியிட யாரும் முன்வரவில்லை என்பதால் இங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 23 ஆயிரத்து 978 பதவியிடங்களுக்கு 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதிக இடங்கள்
நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் காலை முதல் வெளியாகிவருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் பெரும்பாலான இடங்களை திமுக வென்றுள்ளது . மாவட்ட ஊராட்சி வார்டுகளிலும் திமுகவே பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

பாஜக வேட்பாளர்
கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் சுயேட்சையாக போட்டியிட்டார். அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அருள்ராஜே முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற, அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார்.

குருடம்பாளையம் ஊராட்சி
இதையடுத்து, திமுகவைச் சேர்ந்த அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும். சுயேட்சை போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் 1 வாக்கையும் பெற்றுள்ளார். கார்த்திக் தற்போது பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். ஒரே ஒரு வாக்கு வாங்கி கார்த்திக் தோல்வி அடைந்தார். இந்நிலையில் கார்த்திக் குடும்பத்தில் ஐந்து பேர் உள்ளதாகவும் அவர்கள் இவருக்கு ஓட்டு போடவில்லை என்றும் கூறி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

4வது வார்டில் வாக்குகள்
இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் கூறும்போது நான் பாரதிய ஜனதா கட்சியில் வடக்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவராக இருக்கிறேன். சமூக வலைதளங்களில் பார்த்தீர்கள் என்றால் மிகவும் டிரெண்டிங்காக பேமிலி கூட ஓட்டுப்போடவில்லை. ஒரு ஓட்டு தான் வாங்கினார் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னவென்றால், எனக்கும் என் பேமிலிக்கும் அங்கு ஓட்டே கிடையாது. என்னுடைய வார்டு நான்காவது வார்டு, என்னுடைய பேமிலியில் உள்ள ஐந்து பேருக்கும் அங்குதான் ஓட்டு உள்ளது. எனக்கும் அங்கு ஓட்டு கிடையாது. அந்த வார்டு எனக்கு மிகவும் புதியது. முயற்சி செய்து பார்க்கலாம் என்று இறங்கினேன். ஒரு ஓட்டு வாங்கியது உண்மை தான். அதையே நாங்கள் வெற்றியாக நினைத்துக் கொள்கிறோம்.

நடவடிக்கை உறுதி
சமூக வலைதளங்களில் பல செய்தி நிறுவனங்கள் தவறான செய்தியை பரப்புகின்றன. குடும்பத்தினர் கூட ஐந்து ஓட்டு போடவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் இருப்பது 4வது வார்டு. என் குடும்பத்திற்கு வாக்கு இல்லை. அடுத்த முறை கண்டிப்பாக தேர்தலில் களம் காண்பேன். அப்போது ஜெயித்து உங்களை சந்தித்து பேசுவேன். குடும்ப உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை என்று பொய்யான அவதூறு செய்தி பரப்பி வருவதால் மிகவும் மன உலைச்சலில் உள்ளேன். கட்சி மேலிடத்தில் பேசி காவல்துறை மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
சேலம் மக்களுக்கு ஜாக்பாட்.. 210 ஏக்கர் நிலம் ரெடி பண்ணுங்க..!கோயம்புத்தூர் உடன் நேருக்குநேர் போட்டி? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications