கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட்.. மகிழ்ச்சி தெரு கொண்டாட்டத்தில் போட்ட குத்தாட்டம்.. திடீர்னு ஒரு சர்ப்ரைஸ்
கோவை: தமிழ்நாடு முழுவதுமே பல்வேறு இடங்களில் ஹாப்பி ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து ஆடல் பாடல் என மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்.. சென்னையில் தான் இந்த நிகழ்ச்சி முதலில் பிரபலமடைந்தது என்றாலும் இப்போது அனைத்து பிரபலமான ஊர்களிலுமே நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் இளைஞர்கள் பலரும் பங்கேற்று ஆட்டம், பாட்டம் அசத்தி விட்டார்கள்.
மகிழ்ச்சி தெரு என்று அழைக்கப்படக்கூடிய "ஹேப்பி ஸ்ட்ரீட்" என்பது, பொதுமக்களின் மன அழுத்தம் குறைப்பதற்காகவும், வாரத்தின் முதல் நாளை புத்துணர்ச்சியுடன் துவங்குவதற்காகவும், அரசு சார்பிலேயே நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும்.

ஹேப்பி ஸ்ட்ரீட்
மாநகராட்சி சார்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில், போலீசாரின் பாதுகாப்புடன் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன..
பொதுமக்கள், போலீசார் இடையே நல்லுறவை வளர்ப்பதற்காகவும், மகிழ்ச்சியையும் சமூக உணர்வையும் கொண்டுவருவதற்காகவும் இந்த நிகழ்வு கொண்டுவரப்பட்டுள்ளது.. இது, இன்றைய இளைய சமுதாயத்திடமும், நிற்கக்கூடிய நேரம் இல்லாமல் பரபரப்பாக வேலைக்கு செல்வோரிடமும் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
மன அழுத்தம், மன சோர்வு
பொது இடத்தில், தெருவில் கூடும் அனைவருடனும் சேர்ந்து ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் நடனமாடுவதால், தங்களது மன அழுத்தம், மன பாரம் நீங்குகிறது என்றும், காவல்துறையின் பாதுகாப்புடன் நிகழ்ச்சிகள் நடப்பதால், எந்தவிதமான குற்ற சம்பவங்களும இதில் நடக்க வாய்ப்பில்லை என்றும் பொதுமக்களே வரவேற்று கூறுகிறார்கள்.
இது தேவையில்லாத நிகழ்ச்சி, கலாச்சார சீரழிவு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லி, பாஜக தன்னுடைய எதிர்ப்பை கூறி வருகிறது.. சமீபத்தில் தேனியில்கூட எதிர்ப்பை கூறி, நிகழ்ச்சிக்கு தடை கோரி காவல்துறையில் புகாரும் தந்திருந்தது நினைவிருக்கலாம்.
ஆனால், சென்னை, கோவை, தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற ஆடல், பாடல் நிகழ்ச்சி வெகு உற்சாகமாக நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட்
அந்தவகையில் கோவை ஆர்எஸ் புரத்தில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி களைகட்டியது. இதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
தொழில் நகரமான கோவையில், காலையில் எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்வது வரை பணி சுமையில் அலுவலர்கள் முதல் பொதுமக்கள் வரை சிக்கி தவித்து வருகிறார்கள்..
இந்த எந்திர மயமான வாழ்க்கைத்தரத்தில் இருந்து மெல்ல வெளியேறி காரணமாக அமைந்திருக்கிறது இந்த 'மகிழ்ச்சி வீதி விழா' எனப்படும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்'
வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நேற்று கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது. இதில் சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல், நம் பாரம்பரிய நடனம், பாட்டும் பங்கேற்ற பலர் பாடி உற்சாகம் பெற்றனர்.
மகிழ்ச்சி தெரு சர்ப்ரைஸ்
அதுமட்டுமல்லாமல், சாலையில் விளையாட்டுக்கள் மட்டுமின்றி தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற உடற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மேலும் ஓவியம் வரைதல், சைக்கிள் ஓட்டுதல் நடைபெற்றன..
அதைவிட முக்கியமாக மருத்துவ பரிசோதனைகளும் இதில் மேற்கொள்ளப்பட்டன.. ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்துவதே மன அழுத்தத்தை குறைப்பதற்காகத்தான் என்கிறபோது, அதில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது, கோவை மக்களின் கவனத்தை அதிகமாகவே பெற்று வருகிறது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications