கோயம்புத்தூரே ஆடிப்போச்சு.. "அது" பக்கத்தில் தெய்வானை.. எப்பவுமே புருஷனுடன்தான் தண்ணி அடிப்பாராம்
கோவை: கணவனும், மனைவியும் எப்போதுமே ஒன்றாக உட்கார்ந்துதான் தண்ணி அடிப்பாங்களாம்.. கடைசியில் அதுவே வினையில் போய் முடிந்தும்விட்டது. இந்த சம்பவத்தை செய்த அந்த மனைவியின் பெயர், தெய்வானை
ராமநாதபுரம் அருகே உள்ள சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன்.. 75 வயதாகிறது.. இவரது மனைவி தெய்வானைக்கு 65 வயதாகிறது.. இவர்களுக்கு மணிகண்டன் என்ற ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு திருமணமாகிவிட்டது.. செல்வபுரத்தில் குடும்பத்துடன் அவர் தனியே வசித்து வருகிறார்...

லோகநாதனும், தெய்வானையும் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.. தெய்வானை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்... மற்ற நேரங்களில் சில ஆடுகளை வைத்தும் மேய்த்து வருகிறார்..
ஒரே ஜாலி: லோகநாதன் எந்த வேலைக்கும் போகமாட்டாராம்.. எப்பவுமே வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருப்பாராம்.. தெய்வானை மட்டும் வீட்டு வேலைகளை செய்துவிட்டு, ஆடுகளையும் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு, அன்றையதினம் கிடைக்கும் பணத்தில், ஜாலியாக இருப்பார்களாம்.. கணவன்-மனைவி இருவருக்குமே குடிப்பழக்கம் இருந்திருக்கிறது.. 2 பேருமே ஒன்றாக உட்கார்ந்துதான் மது அருந்துவார்களாம்.. அதுவும் தினமும் தண்ணி அடிப்பாங்களாம்.
இப்படித்தான், நேற்று மதியம் 3 மணிக்கு 2 பேரும் ஒன்றாக மது குடித்துள்ளனர்.. 2 பேருக்குமே போதை தலைக்கேறிவிட்டது.. உடனே கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.. அப்போது லோகநாதன், தெய்வானையை அடித்துள்ளார்.. உடனே, தெய்வானைக்கு கோபம் வந்துவிட்டது.. ஆத்திரத்தை அடக்க முடியாமல், உடனே ஒரு உருட்டுக்கட்டையை எடுத்து வந்து, லோகநாதனின் தலையில் ஓங்கி அடித்தார்..
சடலம்: ஒரே அடியில், நிலைகுலைந்து விழுந்துவிட்டார் லோகநாதன்.. மண்டையிலிருந்து ரத்தம் கொட்ட துவங்கிவிட்டது.. அடுத்த சில நிமிடங்களிலேயே உட்கார்ந்த இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துவிட்டார்.. அந்த ரத்த வெள்ளத்தை பார்த்துகூட, தெய்வானைக்கு போதை தெளியவில்லை.. சடலத்தின் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு, புலம்ப ஆரம்பித்துவிட்டார். ஏதேதோ சத்தமாக புலம்பி கொண்டேயிருந்தார்.
இந்த புலம்பல் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கேட்டது.. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அங்கு லோகநாதன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தந்தார்கள்.. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினார்கள்.. அதற்குள் தெய்வானையின் போதையும் தெளிந்துவிட்டது.
மதுபோதை: கணவரை உருட்டு கட்டையால் அடித்து கொன்றுவிட்டதை சொல்லி போலீசாரிடம் கதறி கதறி அழுதார்.. இதையடுத்து, போலீசார் தெய்வானையை கைது செய்தனர். போஸ்ட் மார்ட்டத்துக்கு லோகநாதன் சடலத்தை அனுப்பிவைத்த போலீசார், தெய்வானையிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்த குடிபோதை, இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ??












Click it and Unblock the Notifications