கோவை ஈஷா மருத்துவ சேவை குழு டாக்டருக்கு எதிராக 12 மாணவிகள் பாலியல் புகார்
கோவை: கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே சுமார் 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில் ஈஷா யோகா மையத்தின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் சரவணமூர்த்தி என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் நடமாடும் மருத்துவக் குழு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துக் குழுவில் சரவணமூர்த்தி என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நடமாடும் மருத்துவக் குழு சார்பில், அரசு பள்ளிகள் மற்றும் கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாம்கள் நடத்துவது வழக்கம். அந்த மருத்துவக் குழுவில் இருக்கும் மருத்துவர் சரவணமூர்த்தி பள்ளிகளில் நடைபெறும் மருத்துவக் முகாமில் கலந்து கொள்வது வழக்கம்.

அப்படி மருத்துவ முகாம்களுக்கு செல்லும்போது, அங்குள்ள மாணவிகளிடம் சரவணமூர்த்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குழந்தைகள் நல அதிகாரிகள் ஒரு பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகளுக்கு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதையடுத்து, மருத்துவர் சரவணமூர்த்தி தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 12 மாணவிகள் புகார் கூறினர். இதுகுறித்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் ஈஷா யோகா மையத்தின் நடமாடும் மருத்துவக் குழுவின் மருத்துவர் சரவணமூர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார்.
போலீஸ் நடத்திய விசாரணையில், சரவணமூர்த்தி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வயது 33. இவர் கோவை ஈஷா யோகா மையத்தில் நடமாடும் மருத்துவ குழுவில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். ஆலாந்துறை அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவிகளிடம், ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுடன் பரிசோதிக்காமல், அவர்களை தவறான நோக்கத்தில் நேரடியாக தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை ஈஷா யோகா மையம் தரப்பில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "கோவை மாவட்ட கிராமப் பகுதிகளில் 'அவுட்ரீச்' மருத்துவ வாகனத்தில் மருத்துவராக பணியாற்றியவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதை அறிகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஈஷாவின் உறுதியான நிலைப்பாடு. இந்த வழக்கில் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்." என்று தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலைக் கல்லூரியில், 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கடந்த வாரம் உதவிப் பேராசிரியர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications