சைக்கிளிங் சென்ற பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர்.. சிக்கிய கோவை ஐடி ஊழியர்.. செல்போனில் இருந்த அதிர்ச்சி
கோவை: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வீடு தொடங்கி பணியிடம், பொதுமக்கள் கூடும் இடம் என எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
கோவையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் அதிகாலை சைக்கிளிங் சென்ற பெண்களை பின்தொடர்ந்து, அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஆவாரம்பாளையம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (வயது 25). எம்பிஏ பட்டதாரியான இவர் விளாங்குறிச்சியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை 43 மற்றும் 53 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள், கௌலி பிரெளன் சாலையில் இருந்து அவிநாசி சாலை மேம்பாலத்தில் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.
அதிகாலை சைக்கிளிங் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் சாலையில் பெரிதாக கூட்டம் இல்லை. அப்போது கவின் அவர்களை அந்த இரண்டு பெண்களையும் தன் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர்கள் அருகே சென்று அந்தரங்க பகுதியை தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அந்தப் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கவின் அங்கிருந்து தப்பித்து விட்டார். சாலையில் அப்போது யாரும் இல்லாததால் அவர்கள் மேற்கொண்டு சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். கவின் அந்தப் பெண்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர்கள் பிஆர்எஸ் மைதானம் அருகே சென்றபோது, கவின் அங்கு சென்றுள்ளார்.
அங்கு மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளார். இதில் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த பெண்கள், இதுகுறித்து வெரைட்டிஹால் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கவின் வந்த வாகன எண்ணை எடுத்து, அதன் மூலம் அவரின் செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையினர் சேகரித்தனர். அதைத்தொடர்ந்து அவரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து, கவினின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.
இரண்டாவது முறை அந்தப் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபோது, அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் பதற்றமடைந்த கவின் அவசர அவசரமாக தப்பிக்க முயன்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அதிவேகமாக சென்றவர் பைக்கிலிருந்து கீழே விழுந்து, அவரின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதற்காக தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற கவின், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது காவல்துறையினர் கவினை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைத்துள்ளனர்.
காவல்துறை விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கைது செய்த கவினின் செல்ஃபோனை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறோம். அதில் பல பெண்களின் புகைப்படங்கள் இருந்தன. இதேபோல பெண்களை பின்தொடர்ந்து ஃபாலோ செய்து போட்டோ எடுப்பது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை கவின் வாடிக்கையாக வைத்துள்ளார் என்றனர்.
கவின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியா முழுக்க பேசுபொருளான கோவை பஸ்.. கர்நாடகாவில் உண்மையில் என்ன நடந்தது.. போலீசார் வார்னிங் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications