கோவை ஐடி ஊழியருக்காக பீஹாரில் ஆர்டர் செய்யப்பட்ட துப்பாக்கி.. சிக்கிய 3 பேர்.. அதிர்ச்சி பின்னணி
கோவை: அமைதிக்கு பெயர் எடுத்த கோவையில் சமீப காலமாக கிரைம்ரேட் எகிறி கொண்டிருக்கிறது. முக்கியமாக இளைஞர்களிடையே நடக்கும் கேங் வார் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி கலாசாரம் பரவலாகி வருகிறது. இந்நிலையில் ஐடி ஊழியருக்காக பீஹாரில் இருந்து சட்ட விரோதமாக துப்பாக்கி கடத்தி வரப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை, போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இவற்றை தடுப்பதற்கு காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அப்படியும் கூட புதிது புதிதான முறையில் தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

பீஹார் மாநிலத்தில் இருந்து கோவை மாவட்டத்துக்கு ரயில் மூலம் கள்ள துப்பாக்கி கடத்தி வருவதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கள்ள துப்பாக்கி கடத்தி வந்தவர்களை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன்ராய் (வயது 23) மற்றும் அவரது நண்பரும் கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஶ்ரீ (வயது 23) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம், விளாங்குறிச்சி சாலையில் உள்ள சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு ( வயது 22). கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஹரிஶ்ரீயின் நண்பர் ஆவார். இந்நிலையில் மணிகண்ட பிரபு 'எனக்கு உடனடியாக ஒரு துப்பாக்கி வேண்டும்' என்று ஹரியிடம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஹரி தனது பீஹார் நண்பரான குந்தன்ராயை அணுகியுள்ளார். குந்தன்ராய் பீஹாரைச் சேர்ந்தவர் என்றாலும் கோவையில் தான் தங்கியுள்ளார். அவர் பீஹாரில் தனக்கு தெரிந்த ஒரு இடத்தில் துப்பாக்கி கிடைக்கும் என்று சொல்லியுள்ளார். இருவரும் ரயில் மூலம் பீஹார் சென்று துப்பாக்கி வாங்கியுள்ளனர்.
கோவைக்கு திரும்பி வரும்போதுதான், காவல்துறை நடத்திய சோதனையில் அவர்கள் இரண்டு பேரும் சிக்கியுள்ளனர். இதுதொடர்பாக மணிகண்ட பிரபு, ஹரிஶ்ரீ மற்றும் குந்தன்ராய் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் ஒரு கள்ள துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டக்கள், ஒரு பை, மூன்று செல்போன்கள், ஒரு பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர், அவர்கள் மூன்று பேரையும் பீளமேடு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் எதற்காக யாரிடமிருந்து துப்பாக்கி வாங்கினார்கள், அவர்களின் குற்ற பின்னணி என்ன, மேலும் இதன் பின்னணியில் இருப்பவார்கள் யார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications