கோவை மையத்தில் நரம்பு போல விரியும் மெட்ரோ! சிட்டியின் முகமே மாறும்! அடுத்த ஆலந்தூர் கோவை ஜங்சன்தான்
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் (கோவை) மெட்ரோ ரயிலின் 2 உயர்மட்ட பாதைகள் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் ஜனவரி - பிப்ரவரி மாதம் நடக்கும். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மூலம் கோயம்புத்தூரில் இந்த மெட்ரோ கட்டப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மெட்ரோ முதல் கட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) 2 பாதைகளாக அமைக்கப்பட உள்ளது. மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இரண்டு வழித்தடங்களும் கோயம்புத்தூர் சந்திப்பு நிலையத்தில் சந்தித்து.. நரம்பு போல இரண்டு பாதைகளாக விரியும். கோவை ஜங்சன் சென்னை ஆலந்தூர் போல முக்கியமான சந்திப்பாக மாறும்.

கட்டம் 1 வழிகள்:
வழி-1: உக்கடம் பேருந்து நிலையம் முதல் கோயம்புத்தூர் விமான நிலையம் வரை
நீளம்: 20.4 கி.மீ
வகை: மேல பாலமாக கட்டப்படும் அவிநாசி சாலை வழியாக செல்லும் .
டிப்போ: சேலம் அருகே நீலம்பூர் - கொச்சி பைபாஸ் பகுதியில் கட்டப்படும்.
நிலையங்களின் எண்ணிக்கை: 18
நிலையங்கள்: உக்கடம் பேருந்து நிலையம், டவுன் ஹால், கோயம்புத்தூர் சந்திப்பு, கலெக்டரேட் மெட்ரோ, ஜிகேஎன்எம் மருத்துவமனை, லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, பீளனேடு புதூர், ஃபன் ரிபப்ளிக் மால், ஹோப்ஸ் கல்லூரி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, சித்ரா வட்டம், எம்ஜிஆர் நகர், பிஎல்எஸ் நகர், வெங்கிடாபுரம், பார்க் பிளாசா, நீலம்பூர் நிலையம் மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையம் வரை செல்லும்.
வழி-2: கோவை சந்திப்பு முதல் வலியம்பாளையம் பிரிவு வரை
நீளம்: 14.4 கி.மீ
வகை: பாலம் - சத்தியமங்கலம் சாலை அல்லது சத்தி சாலை வழியாக செல்லும்.
டிப்போ: சேலம் அருகே நீலம்பூர் - கொச்சி பைபாஸ் அருகே கட்டப்படும்.
நிலையங்களின் எண்ணிக்கை: 14
ஸ்டேஷன் பெயர்கள்: கோயம்பேடு சந்திப்பு, ராம் நகர், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், மூர் மார்க்கெட், கணபதி புதூர், அத்திபாளையம் சந்திப்பு, ராமகிருஷ்ணா மில்ஸ், விநாயகபுரம், சித்ரா நகர், சரவணம்பட்டி, விஸ்வாசபுரம், விஜிபி நகர் மற்றும் வலியம்பாளையம் வரை செல்லும்.
அனுமதி: கோவை மற்றும் மதுரை மெட்ரோவை தமிழக அரசு தனது பிரதான திட்டங்களில் ஒன்றாக மாற்றி உள்ளது. இதற்கான அதிக முக்கியத்துவத்தை கொடுத்து திட்டத்தை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி பிப்ரவரி மாதமே இதற்காக நிலம் எடுக்க உள்ளனர்.
பெரும்பாலும் அரசு சாலைகள், சாலைகளுக்கு அருகே உள்ள இடங்களில்தான் நிலம் எடுக்க உள்ளனர் என்பதால்.. இந்த பணிகள் எளிதாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோவிற்கு மத்திய அரசின் நிதி வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மதுரை, கோயம்புத்தூருக்கு புதிதாக மெட்ரோ டிபிஆர் தயாரிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட டிபிஆர் ரிப்போர்ட் பல்வேறு தவறுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டது. இதனால் கிடப்பில் கிடந்த திட்டம் தற்போது மீண்டும் புதிய டிபிஆர் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விரைவில் அதற்கு அனுமதி கிடைக்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications