கோவை குனியத்தூரில் அந்த "விருந்தாளி" யாருங்க? அதிசய உருவம்? ஒவ்வொன்னா மிஸ்ஸிங்.. கிலி கோயம்புத்தூர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில், திடீர் திடீரென பூனைகளை காணவில்லையாம்.. நாய்களும் மிஸ்ஸாகிறதாம்.. என்னவா இருக்கும்?

கோவை மண்டல வனபகுதியானது, சுமார் 70 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்டது. 8 வனச்சரகங்களாக உள்ள இந்த வனப்பகுதியில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் போன்ற வனச்சரகங்கள் கேரள வனப்பகுதியின் அருகிலும், சிறுமுகை,மேட்டுப்பாளையம் வனச்சரகங்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியின் அருகிலும் அமைந்துள்ளது.

Coimbatore kuniyamuthur and What happened near Kovai J Nagar houses, Major Steps taken by Officials

வனச்சரகம்: இந்த வனச்சரகங்களில், யானை, புலி, சிறுத்தை, கரடி, போன்ற ஏராளமான வன விலங்குகள் உள்ளன.. இந்த வனவிலங்குகள் சிலசமயம் பொதுமக்கள் இருப்பிடத்துக்கும் வந்துவிடுகிறது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி இந்த மாவட்டம் உள்ளதால், உணவு, குடிநீர் தேடி குடியிருப்புபகுதிகளின் அருகே சுற்றித்திரிவது அதிகரித்தும் வருகிறது.

அந்தவகையில், கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி புதர்களின் அருகே வனவிலங்குகள் நடமாட்டம் அடிக்கடி தென்பட்டு வருகிறது.

என்ன காரணம்?: இந்நிலையில், குனியமுத்தூர் ஜே.ஜே நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த நாய்களை திடீரென காணவில்லையாம்.. பூனைகளையும் காணவில்லையாம்.. திடீர் திடீரென இந்த விலங்குகள் காணாமல் போனது, மர்மத்தை ஏற்படுத்தியது..

பின்னர், அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அதனால்தான், நாய், பூனை போன்றவற்றை சிறுத்தை வேட்டையாடுவதாகவும் தகவல் பரவியது.. அதற்கேற்றபடி, அபராமி நகர், சுண்டக்காமுத்தூர் பகுதிகளிலும் நாய்களும், பூனைகளும் மாயமாக துவங்கின.. இதனால் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக மதுக்கரை வனத்துறைக்கு இதுகுறித்து தகவல் தந்தார்கள்.

ஆய்வுகள்: வனத்துறையினரும் விரைந்து வந்து, ஜே.ஜே.நகர், அபிராமி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.. அந்த பகுதியிலிருக்கும் புதர்கள், பாழடைந்த கட்டிடங்களிலும் ஆய்வுகள் நடத்தினார்கள்..

சந்தேகப்படும்படியான விலங்கினங்களின் நடமாட்டம் இருக்கிறதா என்றும் சோதனை செய்தனர்.. இறுதியில், அந்தந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, அதில் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அது என்ன?: உண்மையிலேயே ஊருக்குள் வந்து போனது சிறுத்தையா? வேறு ஏதாவது விலங்கா? என்று தெரியவில்லை. ஆனால், சிறுத்தை இருப்பதாக வெளியான தகவல் காரணமாக அந்த பகுதி மக்கள் கிலியில் உறைந்துள்ளனர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+