கோவை அடிச்சு தூக்கிடுச்சு.. சீனாவே வியந்து பார்க்க போகுது.. ஆப்பிள் டீல் போட போகும் உள்ளூர் நிறுவனம்
சென்னை: ஆப்பிள் நிறுவனத்துடன் கோவையை சேர்ந்த நிறுவனம் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை செய்ய உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆப்பிள் உற்பத்தி உச்சம் அடைவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆப்பிள் தனது இந்திய விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில்தான் தற்போது பாக்ஸ்கான் நிறுவனம் சார்பாக ஐபோன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஐபோன் உற்பத்தி நடக்கும் நிலையில் ஓசூரில் டாடா மூலமாக ஐபோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்னையில் ஏற்கனவே ஐபோன் 16 உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து iPhone 17 ஐ உருவாக்கி வருகிறார்கள். முதல் முறையாக புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவிற்கு வெளியே தொடங்கும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறியுள்ளார். சீனாவில் உற்பத்தி தொடங்கும் முன்பாக சென்னையில் இந்த முறை ஐபோன் உற்பத்தி செய்யப்படுகிறது .

இதன் மூலம் சர்வதேச ஐபோன் மார்க்கெட்டில் சீனாவை சென்னை முந்தி உள்ளது. சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.
பெருகும் முதலீடு
சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது. சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழகத்தில் உற்பத்தியை செய்து வருகிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்து உற்பத்தி செய்து வருகிறது.
சென்னையில் இனி அனைத்து search ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஓசூர் ஐபோன்
ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட் கூடுதலாக 35 ஆயிரம் பணியாளர்களை பணிக்கு எடுத்துள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இங்கே 20 ஆயிரம் பணியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 35 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்ட நிலையில் மொத்தமாக 55 ஆயிரம் பேர் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.
இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.
கோவை ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்துடன் கோவையை சேர்ந்த நிறுவனம் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை செய்ய உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆப்பிள் உற்பத்தி உச்சம் அடைவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
அதன்படி விப்ரோ எண்டர்பிரைசஸ் மற்றும் லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆப்பிள் தனது இந்திய விநியோகச் சங்கிலியை விரிவுபடுத்து முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது கோவையிலும் ஐபோன் உற்பத்தி மேற்கொள்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications